Published:Updated:

என் வலியும் வேதனையும் அரசியலை சுத்தமாக்கட்டும் !

அச்சப்படாத அசோக் கெம்கா

என் வலியும் வேதனையும் அரசியலை சுத்தமாக்கட்டும் !

அச்சப்படாத அசோக் கெம்கா

Published:Updated:

ஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தும் அதிகாரிகளை விரட்டிப் பந்தாடுவது ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை. சுடச் சுட ஒளிரும் சங்குபோல இந்த அதிகாரிகள் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்பட்டாலும் தாம் செல்லும் துறைகளில் லஞ்ச ஊழல்களைக் கலைந்து சீரான நிர்வாகத்தை வெளிப்படுத்துவார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், தமிழகத்தின் சகாயத்தைப் போன்றவர் ஹரியானாவின் அசோக் கெம்கா.

தன்னுடைய 22 வருட ஐ.ஏ.எஸ் பணியில் 44 துறைகள், 45 இடமாற்றங்களை அசராமல் சந்தித்திருக்கிறார் அசோக் கெம்கா. கடந்த வாரம் ஹரியானா மாநில அரசின் போக்குவரத்துத் துறையிலிருந்து தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையின், தகுதி குறைந்த பதவிக்குத் தூக்கி அடிக்கப்பட்டார்.

என் வலியும் வேதனையும் அரசியலை சுத்தமாக்கட்டும் !

என்ன காரணம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் மாநில அரசின் போக்குவரத்துத் துறை ஆணையராகப் பணியமர்த்தப்பட்டார் அசோக் கெம்கா. அவர் பொறுப்பேற்று சில வாரங்களிலேயே தூங்கி வழிந்த நிர்வாகத்தைச் சீராக்கி பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். முக்கியமாக, 60 டன்களுக்கு மேல் சுமை ஏற்றிச் செல்லும் பிரமாண்ட வாகனங்களுக்குத் தகுதி சான்றிதழ்களை வழங்க முடியாது என்பதில் மிக உறுதியாக இருந்தார். இதைத் தொடர்ந்து அந்த வாகன உரிமையாளர்கள் போராட்டத்தில் குதிக்க, இது ஆளும் பி.ஜே.பி அரசுக்குப் பெரும் தலைவலியைக் கொடுத்தது. மேலும், தொலைதூரப் பயணங்களுக்குத் தனியார் பேருந்துகளுக்குப் புதிய பெர்மிட் வழங்கியதும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களோடு இருந்த முட்டல் மோதல் போக்கும்தான் அசோக் கெம்காவின் இடமாறுதலுக்குக் காராணமாகச் சொல்லப்படுகிறது.

2012-ல் மாநில அரசின் நில பாதுகாப்புத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கெம்கா அந்தத் துறையில் கடந்த எட்டு வருடங்களில் நடைபெற்றுள்ள வந்த மெகா ஊழல்களை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தினார். அவர் கணக்கீட்டுப்படி ரூ.20 ஆயிரம் கோடி முதல் 3.5 லட்சம் கோடி ரூபாய் வரை முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் அதனை மாநில அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அப்போதைய காங்கிரஸ் அரசிடம் அறிக்கையும் சமர்ப்பித்தார் கெம்கா. மேலும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேராவின் நில முறைகேடுகளை அம்பலப்படுத்தி, ராபர்ட் வதேரா மற்றும் டி.எல்.எஃப் இடையே நடந்த நில விற்பனையையும் ரத்துசெய்து அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். ஆனால், பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசு வதேராவைக் காப்பாற்றி அசோக் கெம்கா மீதே வழக்குகளைப் பதிவுசெய்து அவரைக் களங்கப்படுத்தியது உச்சக்கட்ட அரசியல் சூழ்ச்சி.

என் வலியும் வேதனையும் அரசியலை சுத்தமாக்கட்டும் !

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தக் காத்துக்கொண்டிருந்த பி.ஜே.பி., பிரம்மாஸ்திரமாக கையில் எடுத்தது ராபர்ட் வதேரா மீதான நில பேர ஊழலைத்தான். மாநில சட்டமன்றத் தேர்தலின்போதும் பி.ஜே.பி ஆட்சியைப் பிடிக்க இந்த விவகாரமும் முக்கியக் காரணமாக இருந்தது. ஆனால், அசோக் கெம்கா மீது காங்கிரஸ் ஆட்சியில் பதியப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய தற்போதைய பி.ஜே.பி அரசானது எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, காங்கிரஸ் அரசு செய்த அதே தவற்றை பி.ஜே.பி-யும் செய்கிறது என்று குமுறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

‘இது வழக்கம்போல் நடைபெறும் இடமாறுதல் மட்டுமே. எந்த ஓர் உள்நோக்கமும் இல்லை’ என்று கமுக்கமாக பதில் சொல்கிறார் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர்.

ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கிய முதலே அசோக் கெம்காவை கட்சியில் இணைந்துக்கொள்ள ஆம் ஆத்மி துடித்தது. முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பூபிந்தர் ஹூடாவுக்கு எதிராக கெம்காவை களமிறக்கலாம் என்ற திட்டத்தை வைத்திருந்தது. ஆனால், அப்போது அது கைகூடவில்லை. தற்போது 45-வது முறையாக அவரை இடமாற்றம் செய்திருப்பதால், கடும் அதிருப்தி அடைந்துள்ளார் கெம்கா.

இந்த நிலையில், ஹரியானாவின் பல்வேறு தரப்பு மக்களிடையே அசோக் கெம்காவுக்கான ஆதரவு பெருகி வருகிறது. மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சரான அனில் விஜ் தன்னுடைய ஆதரவை கெம்காவுக்குத் தெரிவித்திருக்கிறார். தன் இட​மாற்றல் உத்தரவைத் தொடர்ந்து ஹரியானா மாநிலத்தின் ஆளுநர் கப்டன் சிங் சோலங்கியை அவர் சந்தித்திருப்பது ஆளும் பி.ஜே.பி-க்குக் கூடுதல் பதற்றத்தைக் கொடுத்திருக்கிறது.
   
தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் துறை செயலா​ளராக நியமிக்கப்பட்டுள்ள அசோக் கெம்காவை தொடர்புகொண்டோம். ‘‘மன்னிக்கவும் நான் மீடியாக்களிடம் பேசுவது இல்லை’’ என்றார் சுருக்கமாக. 
‘‘விடாமுயற்சியும், கடின உழைப்பும் நல்லாட்சியின் முக்கியத் தேவைகள். விளிம்பு நிலையில் தவிக்கும் மக்களுக்கு இலவசங்களின் தேவை இருக்கிறது. இந்த நாடே குடிமக்களின் கௌரவத்தின் மீதுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இன்னல்களுக்கு இடையே ஊழலை ஒழித்து, போக்குவரத்துத் துறையை மேம்படுத்த எண்ணினேன். ஆனால், முடியவில்லை. இந்தத் தருணம் வலிமிகுந்ததாக இருக்கிறது. நான் அனுபவிக்கும் வலியும் வேதனையும் இந்த பாழ்பட்ட அரசியலை சுத்தமாக்கப் பயன்படட்டும்’’ என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுள்ளார் அசோக் கெம்கா ஐ.ஏ.எஸ்.

- நா.இள.அறவாழி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism