Published:Updated:

'தாஜ்மஹால் ஓர் இந்துக் கோயில்': பா.ஜ.க எம்.பி., சர்ச்சைக் கருத்து

'தாஜ்மஹால் ஓர் இந்துக் கோயில்': பா.ஜ.க எம்.பி., சர்ச்சைக் கருத்து
'தாஜ்மஹால் ஓர் இந்துக் கோயில்': பா.ஜ.க எம்.பி., சர்ச்சைக் கருத்து

'தாஜ்மஹால் ஓர் இந்துக் கோயில்': பா.ஜ.க எம்.பி., சர்ச்சைக் கருத்து

உலகின் தன்னிகரில்லா அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹாலை, சில வாரங்களுக்கு முன் சுற்றுலாப் பட்டியலிலிருந்து நீக்கியது உத்தரப்பிரதேச அரசு. இந்நிலையில், 'தாஜ்மஹால் ஓர் இந்துக் கோயில்' என்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார் பா.ஜ.க எம்.பி., வினய் கட்டியார்.

'தாஜ்மஹால் ஓர் இந்துக் கோயில்': பா.ஜ.க எம்.பி., சர்ச்சைக் கருத்து

இதுகுறித்து அவர் மேலும், 'தாஜ்மஹால் ஓர் இந்துக் கோயில். இப்போது அது இருக்கும் இடத்தில், ஒரு சிவன் கோயில் இருந்தது. இந்துக் கடவுள்களின் சிலைகள், இருந்ததற்கான பல குறியீடுகள் தாஜ்மஹாலில் இருக்கின்றன. அதற்கு, 'தேஜோ மஹால்' என்று பெயர் இருந்தது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தாஜ்மஹாலுக்குச் சென்று அதில் இருக்கும் இந்துக் குறியீடுகளைப் பார்க்க வேண்டும். அது, வெறும் கல்லறை என்றால், அதில் எதற்கு அத்தனை அறைகள் கட்டப்பட்டுள்ளன. எந்தக் கட்டடத்தையும் இடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதன் பெயரை தேஜோ மஹால் என்று மாற்றினால் போதும். நமது கட்டடங்களை ஆங்கிலேயர்கள் இடிக்கவில்லை. முகலாயர்கள்தான் இடித்தார்கள்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், 'இந்தியாவின் கலாசாரங்களைப் பிரதிபலிப்பவை, ராமாயணமும் பகவத் கீதையும்தான். தாஜ்மஹால் அல்ல. ஒவ்வொரு நாட்டுக்குச் செல்லும்போதும் அந்த நாட்டின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஒன்றைப் பரிசளிப்பார்கள். ஆனால், நமது இந்தியாவில் மட்டும்தான் அரசு விருந்தினர்களுக்கு நமது நாட்டுக் கட்டடக்கலைகளில் இல்லாத, எந்தவிதத்திலும் இந்தியாவைப் பிரதிபலிக்காத மினார் வடிவ தாஜ்மஹாலைப் பரிசளிக்கிறோம். அந்நிலை தற்போது பிரதமர் மோடி வந்த பிறகுதான் மாறியுள்ளது. அவர், தமது விருந்தினர்களுக்கு ராமாயணத்தைப் பரிசளிக்கிறார். அது, மிதிலை நகரையும் பீகார்  மாநிலத்தையும் பிரதிபலிக்கிறது' என்று தாஜ்மஹால் குறித்து கூறியிருந்தார்.
 

அடுத்த கட்டுரைக்கு