Published:Updated:

'ஆட்சியின் எண்ணிக்கை பிரச்னையால், டெங்கு எண்ணிக்கை மறைக்கப்படுகிறது!' - மு.க.ஸ்டாலின் தாக்கு

டெங்கு பாதிப்பு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உச்சத்தில் இருக்கும் நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'ஆட்சியாளர்களின் எண்ணிக்கை பிரச்னையால், டெங்கு இறப்பு எண்ணிக்கை மறைக்கப்படுகிறது' என்று கூறியுள்ளார்.

தேனாம்பேட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், 'ஆட்சியாளர்களின் எண்ணிக்கையில் பிரச்னை இருப்பதால், டெங்கு இறப்பு எண்ணிக்கையை மாற்றிக் கூறிவருகின்றனர். இந்த ஆட்சி ஒழிந்தால், டெங்கு பிரச்னையும் ஒழிந்துவிடும்' என்றார். அப்போது செய்தியாளர் ஒருவர், 'மெர்சல்' திரைப்படத்தில் மத்திய அரசுக்கு எதிராக வசனங்கள் உள்ளதால், வழக்குத் தொடுக்கப்படும் என்று தமிழிசை கூறியுள்ளாறே?' என்று கேட்டதற்கு, 'நான் 'மெர்சல்' படமும் பார்க்கவில்லை தமிழிசை சௌந்தரராஜன் சொன்ன கருத்தையும் கேட்கவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம்தான் அதுகுறித்து நீங்கள் கேட்க வேண்டும்' என்று பதிலளித்தார். 

அடுத்த கட்டுரைக்கு