Published:Updated:

காவிரி: கர்நாடகத்திற்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல்!

காவிரி: கர்நாடகத்திற்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல்!
காவிரி: கர்நாடகத்திற்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல்!
காவிரி: கர்நாடகத்திற்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல்!

புதுடெல்லி: கர்நாடக மாநிலம், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை  திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல்  செய்துள்ளது.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில்,வினாடிக்கு  9,000 கன அடி தண்ணீர் வீதம், 20.9.2012 முதல் 15.10.2012 வரை கர்நாடகம்  தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார்.இதனை  முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கவில்லை.ஆனால் அதையும் தர கர்நாடக அரசு மறுப்பு  தெரிவித்தது.
 
இந்நிலையில், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கினை கர்நாடகம் திறந்துவிட உத்தரவு  பிறப்பிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது தொடர்பாக முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம்  நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தின் முடிவில், காவியில் தமிழகத்திற்குரிய பங்கினை கர்நாடகம்  திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கக் கோரும் மனுவினை உடன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்  செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
 
அதன்படி காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழக அரசு இன்று உச்ச  நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

அதில்,"நாள் ஒன்றுக்கு 2 டி.எம்.சி. வீதம் 24 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட  கர்நாடக அரசுக்கு உத்தரவிடவேண்டும். வறட்சி காலங்களில் தமிழகத்தின் பங்கை  விதிமுறைப்படி வழங்க காவிரிநதிநீர் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்” என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.