Published:Updated:

வைகோவுடன் உதயகுமார் சந்திப்பு!

 வைகோவுடன் உதயகுமார்  சந்திப்பு!
வைகோவுடன் உதயகுமார் சந்திப்பு!
 வைகோவுடன் உதயகுமார்  சந்திப்பு!

ராதாபுரம்:  இன்று இடிந்தகரைக்கு வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 

 வைகோவுடன் உதயகுமார்  சந்திப்பு!

  கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை  சந்தித்தார்.

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி அணு உலைக்கு எதிரான மக்கள்  இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இன்று இடிந்தகரையில் மக்கள்  மண்ணுக்குள் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.திரளான ஆண்களும், பெண்களும்  இடிந்தகரை கடற்கரையில் கூடி கடல் மணலில் உடலை புதைத்து போராட்டம் நடத்தினர்.

இடிந்தகரை ஆலயம் முன்பு ஒரு பகுதியினர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

இடிந்தகரை வந்த உதயகுமார்

கடந்த 10-ம் தேதி இடிந்தகரை கடற்கரையில் பொதுமக்கள் அணு உலை முற்றுகை  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசி  கலைத்தனர்.பல்வேறு வன்முறை சம்பவங்களும் நடந்தன.

இதைத்தொடர்ந்து மறுநாள் 11-ம் தேதி போலீசில் சரண் அடைய போவதாக உதயகுமார்  அறிவித்தார்.ஆனால் அதனை ஏற்க மறுத்த இடிந்தகரை இளைஞர்கள், உதயகுமாரை  குண்டு கட்டாக தூக்கி கடல் மார்க்கமாக கூத்தங்குழிக்கு கொண்டு சென்றனர். அங்கு  பொதுமக்களுடன் உதயகுமாரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.15 நாட்களாக அவர்  இடிந்தகரை வரவில்லை.

இந்நிலையில் இன்று வைகோ வருகையையொட்டி உதயகுமார் இடிந்தகரைக்கு  வந்தார்.அவரை இடிந்தகரை மக்கள் மற்றும் போராட்டக்குழுவினர் கட்டித்தழுவி  வரவேற்றனர்.

##~~##
இதனிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மதியம் 12 மணிக்கு  இடிந்தகரை வந்தார்.அங்கு உதயகுமார்,புஷ்பராயன்,முகிலன் உள்ளிட்டோரும் அங்கு  வந்தனர்.அவர்களை சந்தித்துப் பேசிய வைகோ,பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்  மத்தியில் பேசினார்.
இதனிடையே நாளை மாலையில் இடிந்த கரையில் அணுசக்திக்கு எதிரான அனைத்து  அரசியல் இயக்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில்  கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு  செய்யப்பட இருக்கிறது.