Published:Updated:

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் அன்னிய முதலீடு ரத்து: பா.ஜ. அறிவிப்பு!

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் அன்னிய முதலீடு ரத்து: பா.ஜ. அறிவிப்பு!
மத்தியில் ஆட்சிக்கு வந்தால் அன்னிய முதலீடு ரத்து: பா.ஜ. அறிவிப்பு!

புதுடெல்லி: மத்தியில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்யப்படும் என்று பா.ஜனதா கட்சி  அறிவித்துள்ளது.

பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் ஹரியானா மாநிலம் சூரஜ்கன்ட்டில்  இன்று காலை தொடங்கியது. இதில் நிதின் கட்கரி, அத்வானி உள்ளிட்ட 300க்கும்  மேற்பட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் அன்னிய முதலீடு ரத்து: பா.ஜ. அறிவிப்பு!

கூட்டத்தை பா.ஜனதா தலைவரான நிதின் கட்கரி தொடங்கி வைத்துப்பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பா.ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்,மத்திய அரசு  செயல்படவே இல்லை என்றும்,எந்த நேரமும் கவிழும் நிலையில் அது இருப்பதாகவும்  தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் சூழலில் மக்களவைக்கு எந்த நேரமும் தேர்தல் நடைபெற  வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.

கூட்டணிக் கட்சிகளையும், ஊழல் குற்றச்சாட்டுக்களையும் சமாளிக்கவே மத்திய அரசுக்கு  நேரம் போதவில்லை என்று கூறிய அவர்,ஊழலைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய  அரசு,எதிர்க்கட்சிகளை மிரட்டவும், ஊழலை மறைக்கவும், சிபிஐ-யை பயன்படுத்தி  வருவதாகவும்,சிபிஐ-யின் துணை மையம் ஒன்றை காங்கிரஸ் அலுவலகத்தில்  திறக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

அன்னிய முதலீடு ரத்து


அவரைத் தொடர்ந்து பேசிய அக்கட்சியின் துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி,  பா.ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வந்தால் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு  அளிக்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள  சிரோன்மணி அகாலி தளக்கட்சி, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்ட்ற்கு ஆதரவு  தெரிவித்துள்ள நிலையிலேயே, பா.ஜனத இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல  என்று குறிப்பிட்டுள்ள பா.ஜனதா, சீர்திருத்தங்கள்,மக்களுக்கு ஆதரவான கொள்கைகள்  மற்றும் சமச்சீரான வளர்ச்சி ஆகியவையே தங்களது நிர்வாக சாதனை என்று  தெரிவித்துள்ளது.