Published:Updated:

’எனது நாட்டுப்பற்றை சோதிக்க வேண்டாம்’ - தேசிய கீதம் குறித்து கமல் ட்வீட்

’எனது நாட்டுப்பற்றை சோதிக்க வேண்டாம்’ - தேசிய கீதம் குறித்து கமல் ட்வீட்
’எனது நாட்டுப்பற்றை சோதிக்க வேண்டாம்’ - தேசிய கீதம் குறித்து கமல் ட்வீட்

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டில் நடக்கும் பல விஷயங்கள் குறித்த தனது கருத்தை பதிவு செய்துவருகிறார். 

திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதும், அவ்வாறு இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  இந்த உத்தரவுக்குப் பலவிதமான கருத்துகள் வந்தன. அதன்பின்னர் தொடர்ந்து, திரையரங்கில் ஒவ்வொரு காட்சி தொடங்கும் முன்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டது. 

இதுதொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அண்மையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கும்போது கட்டாயமாக எழுந்து நிற்க வேண்டுமா என கேள்வி எழுப்பினார். மேலும், ”தேசிய கீதம் இசைக்கும்போது மக்கள் எழுந்து நின்று தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. தேசியக் கொடி விதிகளில் திருத்தம் கொண்டுவருவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.” என உச்ச நீதிமன்றம் நேற்று கருத்து தெரிவித்தது. 

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் தேசிய கீதம் நள்ளிரவில் இசைக்கப்படும். அதேபோல் இங்கும் பின்பற்றலாம். ஆனால், கண்ட இடங்களில் எனது தேசப்பற்றைக் கட்டாயப்படுத்தவோ அல்லது சோதிக்கவோ வேண்டாம்” என ட்வீட் செய்துள்ளார். ஏற்கெனவே மெர்சல் படத்தில் சிங்கப்பூரை ஒப்பிட்டு வசனம் பேசியதற்குத் தான் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனும் அதே சிங்கப்பூரை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.