Election bannerElection banner
Published:Updated:

கோவையில் விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம்; பா.ஜ.க கொடி எரிப்பு

கோவையில் விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம்; பா.ஜ.க கொடி எரிப்பு
கோவையில் விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம்; பா.ஜ.க கொடி எரிப்பு

கோவையில் விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம்; பா.ஜ.க கொடி எரிப்பு

'திருமாவளவன் கடப்பஞ்சாயத்து செய்கிறவர்' என்ற தமிழிசையின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில்  ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகள் தொடர்பாக அரசியல் தலைவர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தமிழிசை செளந்தரராஜன் கொடுத்த பேட்டியில், ’திருமாவளவன்  கட்டப்பஞ்சாயத்து செய்கிறவர்’ என்று விமர்சித்தார். தமிழிசையின்  கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது,  தமிழிசைக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை என்றும். திருமாவளவனிடமிருந்து அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். வாயில் வந்ததையெல்லாம் தமிழிசை உளறுவதாகவும் அவர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், தமிழிசைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழிசையின் உருவப்படத்தை கிழித்து வீசியதோடு மட்டுமல்லாமல் பி.ஜே.பி கொடியை எரித்தும் , செருப்பால் அடித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு