Election bannerElection banner
Published:Updated:

‘உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறிவருகிறார் தமிழிசை’ நாகர்கோவில் போலீஸில் வி.சி.க புகார்

‘உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறிவருகிறார் தமிழிசை’ நாகர்கோவில் போலீஸில் வி.சி.க புகார்
‘உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறிவருகிறார் தமிழிசை’ நாகர்கோவில் போலீஸில் வி.சி.க புகார்

‘உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறிவருகிறார் தமிழிசை’ நாகர்கோவில் போலீஸில் வி.சி.க புகார்

 பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கன்னியாகுமரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், போலீஸில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய், தீபாவளிக்கு வெளியான 'மெர்சல்' படத்தில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி  மற்றும் பணமதிப்பு இழப்புகுறித்து பொய்யான வசனம் கூறுவதாக பா.ஜ.க-வினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்தார். இப்போது அது பிரச்னையாக மாறி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும்   பா.ஜ.க தரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உருவ பொம்மையை எரித்தனர். இதுபோல தமிழகத்தின் பல பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில், ’எங்கள் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை கூறி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும்  தொல் திருமாவளவன் தொடர்ந்து போராடிவருகிறார். அவரை, சாதிய வன்மத்துடன் கட்டப்பஞ்சாயத்து செய்தார் என்றும், நிலத்தை அபகரிப்புச்  செய்தார் என்றும் பொய்யான தகவல்களை தமிழிசை கூறிவருகிறார். எனவே, திருமாவளவனின் நற்பெயரைக் கெடுக்கும் விதமாக  பேசிவரும் பா.ஜ.க தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படியும், இந்திய தண்டனைச் சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு