
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை இன்று தொடங்குகிறது..!
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரணையைத் தொடங்குகிறார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, தமிழக அரசு செப்டம்பர் 29-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த விசாரணை ஆணையம், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலை, சிகிச்சை முறை, மரணத்துக்கான காரணங்கள்குறித்து விசாரணை நடத்தி, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஆணையத்துக்காக, சென்னை எழிலக வளாகத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் நீதிபதி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்குறித்த விசாரணை இன்று தொடங்க உள்ளது.