அ.அப்துல்காதர், பழைய பெருங்களத்தூர்.

அரசியல் கட்சிகளுக்குப் பெரிய நிறுவனங்கள் தரும் நன்கொடைக்குத் தடை விதிக்கக் கூடாது என்ற கருத்தில் காங்கிரஸும் பி.ஜே.பி-யும் ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளனவே?

அப்படித்தானே எடுப்பார்கள்? அரசியல் கட்சிகளுக்குப் பணம் வரும் பாதை அதுதானே. அதனை அவர்கள் தடுப்பார்களா என்ன? மேலும், முறைகேடுகளால் திரட்டப்படும் பணத்தைக்கூட நிறுவனங்கள் கொடுத்த நன்கொடைகள் என்று மாற்றிச் சொல்கிறார்கள். அதையும் விட்டுவிட முடியாது அல்லவா?

நா.மோகன்ராஜ், நல்லூர்பாளையம்.

முந்தைய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்த ஆறு கட்சிகள், மீண்டும் இணைந்துள்ளனவே. அவர்களது கூட்டணி நீடிக்குமா?

ஒரே ஒரு கேள்வியை அவர்களிடம் கேட்காமல் இருந்தால், அதுவரை நீடிக்கும். ‘உங்களில் யார் அடுத்த பிரதமர் வேட்பாளர்?’ என்பதுதான் அந்தக் கேள்வி.

லட்சுமிசெங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).

தி.மு.க-வை காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் புகழ்ந்து தள்ளி வருகிறாரே?

புகழ்ந்துதானே ஆகவேண்டும்? காங்கிரஸ் கட்சியை அ.தி.மு.க தனது கூட்டணியில் சேர்க்காது. அதற்காகத் தனித்தும் நிற்க முடியாது. எனவே, இளங்கோவன் பயணம் செய்ய இருக்கும் ஒரே வாகனம் தி.மு.க-தான். அதனால் பழசு அனைத்தையும் மறந்து, பாராட்டத் தொடங்கிவிட்டார். பிழைக்கத் தெரிந்தவர்தான்.

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

மகாபாரதக் கதையை மக்கள் இன்னமும் ஆர்வமாக ரசிப்பதற்கு என்ன காரணம்?

‘யானையின் அடியில் மற்றெல்லா உயிரினங்களின் அடிகளும் அடங்குவது போல ராஜ தர்மத்தில் மற்ற தர்மங்கள் அனைத்தும் அடங்கி இருக்கின்றன’ என்று மகாபாரதத்தில் ஒரு வரி உண்டு. அது மகாபாரதக் கதைக்கும் பொருந்தும். அந்தக் கதைக்குள் எல்லாவித குணமுள்ள மனிதர்களும் வந்து செல்வார்கள். அந்தப் பாத்திரங்களைப் படிக்கும்போது நம்மையும் நம்மைச் சுற்றி உள்ள மனிதர்களையும் உணரலாம். காலங்கள் கடந்தும் மக்களுக்கு அந்தக் காப்பியம் ஆர்வமாக இருப்பதற்குக் காரணம் இதுதான். எது புனைவு? எது யதார்த்தம் என்று அறியமுடியாத அதன் பிணைப்பு அசாத்தியமானது.

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-4.

2016-ம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதே எந்தக் கட்சி சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது?

கடந்த 26-ம் தேதி ஒரே நாளில் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அலுவலகங்களுக்கும் விஜயகாந்த் பறந்து பறந்து சென்றதைப் பார்த்தால், அவர்தான் தேர்தலுக்காக இப்போதே சுறுசுறுப்பு அடைந்திருப்பதாகத் தெரிகிறது.

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

தி.மு.க., அ.தி.மு.க அல்லாத வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது சுலபமானதா? சிரமமானதா?

அது இரண்டு விதத்தில் சிரமமானது. ஒன்று, தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சியினரும் சேர்ந்து குறைந்தபட்சம் 55 சதவிகிதம் முதல் அதிகபட்சம் 65 சதவிகித வாக்குகளை வாங்கிவிடுவார்கள். எனவே, இன்னொரு கூட்டணிக்கு இதைவிட அதிகமான வாக்குகள் கிடைக்க வாய்ப்பு இதுவரை இல்லை. அதனால், வேறு கட்சிகள் இந்த முயற்சியை எடுப்பது இல்லை.

இரண்டாவதாக, தி.மு.க அல்லது அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும்போது பவ்யமாக இருக்கும் கட்சிகள், அந்த மரியாதையை இன்னொரு கட்சிக்குக் கொடுக்கத் தயாராக இல்லை. கொடுக்கும் அளவுக்கு இன்னொரு கட்சி உருவாகவும் இல்லை. அதனால்தான் தி.மு.க., அ.தி.மு.க அல்லாத கட்சிகளின் கூட்டணி உருவாக முடியாமல் போகிறது.

பு.காயத்திரி, மேடவாக்கம்.

பச்சிளம் குழந்தைகளின் தொடர் இறப்பு ஏன்?

எடை குறைவாக குழந்தைகள் பிறக்கின்றன. அதனால் இறக்கின்றன என்று பொத்தாம் பொதுவாக அரசு அதிகாரிகள் காரணம் சொல்கிறார்கள். எடை குறைவாக ஏன் குழந்தைகள் பிறக்கிறார்கள் என்ற சமூகக் கவனிப்பு அவர்களிடம் இல்லை. பெரும்பாலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் இது போன்ற இறப்புகள் அதிகமாக நடக்கின்றன. அதற்கு மிக முக்கியக் காரணமாக சமூக ஆர்வலர்கள் சொல்வது, ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகளைத்தான். கர்ப்பம் அடையும் பெண்கள் தங்களது கர்ப்பம் குறித்த தகவல்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிய வேண்டும். அவர்களுக்கு உடனடியாக உடற்பரிசோதனை செய்ய வேண்டும். தாய் - சேய் பாதுகாப்பு அட்டை வழங்க வேண்டும். அங்கு தாய் என்னென்ன உடற்பரிசோதனை செய்ய வேண்டும், என்னமாதிரியான உணவை உட்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படும். சத்துமாவு வழங்குவார்கள். இவற்றை ஒழுங்காகச் செய்திருந்தால் எடைகுறைவான குழந்தைகள் பிறந்திருக்காது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறித்த முழு வெள்ளை அறிக்கை தயாரித்து சீர்படுத்தினால் மட்டுமே இத்தகைய குழந்தை இறப்புகளை ஓரளவு தடுக்கலாம்.

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் 1970-க்குப் பிறகு எழுதாமல் போனதற்கு அவர் எதிர் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க மறுத்ததே காரணம் என்கிறாரே எழுத்தாளர் பிரபஞ்சன்?

1970-களுக்குப் பின்னால் ஜெயகாந்தன் எழுதாமல் போனதற்குக் காரணம், அவருக்கு அரசியல் கட்சி ஈடுபாடு அதிகம் ஆனதுதான். 1967-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் ஈ.வெ.கி.சம்பத், கண்ணதாசன், சோ அணியில் இவரும் ஒருவராகச் சேர்ந்தார். காமராஜர் கரத்தை வலுப்படுத்த முயற்சித்து நாடு முழுக்க தேசிய சிந்தனையாளர்களைத் திரட்ட தனது காலத்தை முழுமையாகச் செலவு செய்தார். அவரது எழுத்துகள் குறையக் காரணம் இது.

‘நீங்கள் ஏன் இப்போது எழுதுவது இல்லை?’ என்று கேட்டபோது, ‘நான் இதுவரை எழுதியதை எல்லாம் நீங்கள் படித்து விட்டீர்களா? எழுதியது அனைத்தையும் படித்தவர்கள் இதைக் கேளுங்கள்’ என்று சொன்னார் ஜெயகாந்தன். முழுமையாக தனது எழுத்துகள் சமூகத்தில் படிக்கப்படவில்லை என்ற ஏக்கமும் அவருக்கு இருந்தது.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

இன்னும் மற்ற கட்சியினர் தங்கள் கட்சிகளில் இருந்து விலகி, அ.தி.மு.க-வில் ஆர்வமுடன் சேர என்ன காரணம்?

ஆளும் கட்சியாக இருப்பதால்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002 kalugu@vikatan.com என்ற முகவரியிலும் அனுப்பலாம்!