ஊரைச் சுத்தப்படுத்தும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், முதலில் அந்த வேலையை தனது துறைக்குள் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளது உயர் நீதிமன்றம்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலராக கார்த்திகேயனை நியமித்து, தனி நீதிபதியிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட தமிழக அரசை, இப்போது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வும் கண்டித்துள்ளது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திகேயனை, 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசு நியமித்தது. உறுப்பினர் செயலராக இருப்பவருக்கு துறைரீதியான குற்றச்சாட்டுகள் எதுவும் நிலுவையில் இருக்கக் கூடாது என்பது முக்கியமான தகுதி. ஆனால், இவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்துள்ளன. இது எதையும் கருத்தில்கொள்ளாமல், கார்த்திகேயனை தமிழக அரசு உறுப்பினர் செயலர் பொறுப்புக்கு நியமித்தது. இந்த நியமனத்தை எதிர்த்து, பத்திரிகையாளர் அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அவருக்காக வழக்கறிஞர் குமாரதேவன் ஆஜரானார்.

அந்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் கடந்த ஜனவரி 5-ம் தேதி தனது தீர்ப்பை வழங்கினார். அந்தத் தீர்ப்பில், ‘தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலராகக் கடந்த 2011 செப்டம்பர் முதல் 2012 ஜனவரி வரை கார்த்திகேயன் பதவி வகித்துள்ளார். அதற்கு முன்பு, அவர் மாவட்ட சுற்றுச்சூழல் துறை பொறியாளராக இருந்தார். அப்போது, அவர் மீது பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அதில் சில நிரூபணமாகி உள்ளன. ஆனால் அவரையே, தமிழக அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் என்ற பொறுப்பில் நியமித்துள்ளது. இதில், விதிமுறைகளை மீறிய செயல் அவசர அவசரமாக நடந்துள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர், தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் வரை அவரை அந்தப் பொறுப்பில் நியமிக்க முடியாது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகள் தெளிவாகச் சொல்கின்றன.

கார்த்திகேயனுக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரத்து செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், லஞ்ச ஒழிப்புத் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளது.
எப்படி இது சாத்தியம்? கார்த்திகேயன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரி, மே மாதம் 2014-ம் ஆண்டு அறிக்கை அளித்துள்ளார். ஆனால், அதே ஆண்டு, ஜூலையில், கார்த்திகேயனை உறுப்பினர் செயலர் பதவியில் நியமித்து இரண்டு கூடுதல் செயலாளர்கள், அமைச்சர் ஆகியோர் கையெழுத்திட்டு, முதலமைச்சருக்கும் பரிந்துரை செய்துள்ளனர். முதலமைச்சரும் அந்தத் தேதியில் கையெழுத்திட்டு கார்த்திகேயனை உறுப்பினர் செயலர் பதவியில் நியமித்துள்ளார். எதற்காக இப்படிச் செய்ய வேண்டும்? ஏன் இந்த அவசரம்? இது நீதிமன்றத்துக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது. கார்த்திகேயன் நியமனம் எந்தவகையிலும் சரியான நியமனம் அல்ல’’ என்று விளாசித் தள்ளினார்.

இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் திருந்தாத உயர் அதிகாரிகள், கார்த்திகேயன்தான் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்தார்கள். அந்த வழக்கு நீதிபதிகள் அக்னி ஹோத்ரி, வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘‘உச்ச நீதிமன்றம் சமீபகாலமாக, ‘நிறுவன ஒருமைப்பாடு’ என்ற வார்த்தையை அதிகமாகப் பயன்படுத்துகிறது. கடந்த 22.01.2015 அன்று உச்ச நீதிமன்றம், பி.சி.சி.ஐ Vs பீகார் கிரிக்கெட் அசோசியேஷன் தொடர்ந்த வழக்கில், பி.சி.சி.ஐ தலைவராக சீனிவாசன் தொடரக் கூடாது என்று தீர்ப்பளித்தபோது, நிறுவனத்துக்கான கோட்பாடுகள், நேர்மைக்கான விதிகள் போன்றவற்றைத் தெளிவாக வரையறுத்துள்ளது.

அந்தத் தீர்ப்பில், ‘தனி மனிதர்கள் பறவைகளைப் போன்றவர்கள். வருவார்கள், போவார்கள். ஆனால், நிறுவனம் என்பது ஆலமரம் போன்றது. என்றும் நிலைத்து இருக்கக் கூடியது. அதனால், தனி மனிதர்களுக்காக நிறுவனத்தின் விதிகளை மாற்றக் கூடாது’ என்றும் குறிப்பிட்டுள்ளது. இது இந்த வழக்குக்கும் அப்படியே பொருந்தும். கார்த்திகேயன் நியமனம் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கவில்லை. எனவே, அவரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் பதவியில் நியமித்தது செல்லாது என்று சொல்லி நீதிபதி ராமசுப்பிரமணியம் அளித்த தீர்ப்பு சரியானது. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’’ என்று தீர்ப்பளித்தனர்.

குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களை, பொறுப்புகளில் நியமிக்க தமிழக அரசு ஆர்வம் காட்டுவது ஏனோ?

- ஜோ.ஸ்டாலின்