Election bannerElection banner
Published:Updated:

பா.ஜ.க.வுக்கும் வி.சி.க.வுக்கும் என்ன பிரச்னை? விவரிக்கிறார் வன்னி அரசு

பா.ஜ.க.வுக்கும் வி.சி.க.வுக்கும் என்ன பிரச்னை? விவரிக்கிறார் வன்னி அரசு
பா.ஜ.க.வுக்கும் வி.சி.க.வுக்கும் என்ன பிரச்னை? விவரிக்கிறார் வன்னி அரசு

பா.ஜ.க.வுக்கும் வி.சி.க.வுக்கும் என்ன பிரச்னை? விவரிக்கிறார் வன்னி அரசு

பா.ஜ.க.வின் கொள்கைகளை வி.சி.க. எதிர்த்ததால் எங்களைத் தரம்தாழ்ந்து பா.ஜ.க.தலைவர்கள் விமர்சிப்பதாக வன்னிஅரசு தெரிவித்தார். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாமீது புகார் கொடுத்துள்ளார். 
 புகார் மனுவில் கூறியிருப்பதாவது, "தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் நலனுக்காகப் போராடிக் கொண்டிருக்கிற இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இக்கட்சியை நேர்மையுடனும் நாகரித்துடனும் வழிநடத்தி வருபவர் திருமாவளவன். 
 அவருக்கும் கட்சிக்கும் எதிராக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, கடந்த 24.10.2017 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் 'கட்டப்பஞ்சாயத்து, வன்முறை, ரவுடித்தனம் இதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் அடையாளம், தமிழக அரசியல் களத்திலிருந்து அவர்களைஅப்புறப்படுத்தப்பட வேண்டும்' எனக் கருத்துப் பதிவிட்டுள்ளார். 
 இக்கருத்து மிகவும் அபாண்டமானதாகும். திட்டமிட்டு வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பியுள்ளார். ஆதாரமில்லாத இந்தக் கருத்து இணைய தளங்களின் ஊடக உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால், எமது கட்சி மற்றும் தலைவரின் மீதான நன்மதிப்புக்குப் பாதிப்பும் லட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகளுக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. 
 எனவே, ஹெச்.ராஜாமீது அவதூறு பரப்புதல், வன்முறைத் தூண்டுதல் எமது தலைவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கிரிமினல் கும்பலைத் தூண்டுதல், தலித் சமூகத்தையும் எமது தலைவரையும் சாதிய மனப்பான்மையோடு இழிவு செய்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். 
குறிப்பாக, தமிழகத்தில் வேறு எந்தத் தலைவரையும் இவ்வாறு இழிவுப்படுத்தும் வகையில் இதுவரை பேசாத அவர், எமது இயக்கமும் எமது தலைவரும் தலித் சமூகத்தின் அடையாத்தைக் கொண்டிருப்பதாலேயே சாதிய வன்மத்தோடு அவர் செயல்பட்டிருப்பதால் ஹெச்.ராஜாமீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்" 
 இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். 
 

வன்னி அரசுவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்

 பா.ஜ.க.வுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் என்ன பிரச்னை?

பா.ஜ.க.வின் கொள்கைக்கு எதிராக முதலில் ஆர்ப்பாட்டம் நடத்துவது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். புதிய கல்வி கொள்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, பணமதிப்பிழப்பு போன்றவற்றை நாங்கள் முழுமையாக எதிர்த்தோம். தொடர்ச்சியாக இந்துத்துவத்துக்கு எதிராக நாங்கள் செயல்படுவதால் எங்கள்மீது தரம்தாழ்ந்த விமர்சனங்களை வைத்துள்ளனர். எங்களுக்கு நேரிடையாக பதில் சொல்ல முடியாமல் அவர்களது பலவீனத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள். 

 காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்துக்குச் செல்வீர்களா?

 எங்களைக் கட்டப்பஞ்சாயத்து கும்பல் என்று பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சித்துள்ளார். அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழிசை சௌந்தரராஜன், அந்த வார்த்தையை வாபஸ் வாங்குவதோடு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு சட்ட அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதுபோல, ஹெச்.ராஜா மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.  

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு