Election bannerElection banner
Published:Updated:

’கொசுவைவிட வேகமாகச் செயல்படுங்கள்!’ - அதிகாரிகளிடம் கலகலத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

’கொசுவைவிட வேகமாகச் செயல்படுங்கள்!’ - அதிகாரிகளிடம் கலகலத்த அமைச்சர் விஜயபாஸ்கர்
’கொசுவைவிட வேகமாகச் செயல்படுங்கள்!’ - அதிகாரிகளிடம் கலகலத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

’கொசுவைவிட வேகமாகச் செயல்படுங்கள்!’ - அதிகாரிகளிடம் கலகலத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நலன் மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் டெங்கு ஒழிப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், "தமிழகத்தில் டெங்கு ஒழிப்பு முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டுவருகிறது, டெங்கு பாதிப்பதைச் சுகாதாரத்துறையின் பிரச்னையாகக் கருதாமல், முதல்வர் அனைத்துத்துறை பிரச்னையாகக் கருதி ஒன்றிணைத்து செயல்படுத்திவருகிறார். மருத்துவத்தில் மதுரை மாவட்டம் இரண்டாவது தலைநகரமாகச் செயல்பட்டுவருகிறது.

கொசுவின் உற்பத்தி மிகவும் வீரியமானது. அதன் முட்டைகளின் பெருக்கமும் அதிகம் கொசுவோடு போட்டிப் போடுவது மிகப்பெரும் சவால்தான். ஆனாலும், அதிகாரிகள் நினைத்தால் மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தி டெங்குவை தவிர்க்கலாம். எனவே, நாம் கொசுவைவிட வேகமாகச் செயல்பட வேண்டும். சுகாதாரத்துறை செயலர் சொல்வதுபோல டெங்குவின் தாக்கம் ஏறுவரிசையில் செல்லாமல் தற்போது மிதமாகச் செல்கிறது. எனவே இன்னும் அதிக வேகமாகச் செயல்பட்டு டெங்குவை ஒழிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் .

சுகாதார செயலர் பேசும்போது ’டெங்கு பாதிப்புக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது அனைவரும் ஒன்றிணைந்து போராடினால்தான் தடுக்க முடியும். இரயில்வே ஜங்ஷன், பணிமனைகள் உள்ளிட்ட இடங்கள் மத்திய அரசுக் கட்டுப்பாடு என்று விட்டுவிடாமல் எல்லா இடங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார் .

மேலும் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது ’காய்ச்சலில் எல்லாம் டெங்கு அல்ல மொத்தம் 29 வகை காய்ச்சல் உள்ளன. எனவே அனைத்தையும் டெங்கு காய்ச்சல் என்று பீதி அடைய வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார் .

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு