Election bannerElection banner
Published:Updated:

கிணத்துக்கடவு எம்.எல்.ஏ-வை காணவில்லை! - தொகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

கோவை கிணத்துக்கடவு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வான எட்டிமடை சண்முகத்தைக் காணவில்லை என்று கிணத்துக்கடவு தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட போத்தனூர், சுந்திரபுரம் உள்ளிட்ட பகுதிகளில், எங்கே போனார் எம்.எல்.ஏ என்ற வாசகத்தோடு ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டரால் அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். அதில், 'ஊரெல்லாம் டெங்கு… உயிரைப்பறிக்குது இங்கு', சதுர அடி வாரியாகக் குடிநீருக்கு வரி... கூடுதல் டெபாசிட், குப்பை வரிவிதிப்பு… போன்ற பிரச்னைகளைக் குறிப்பிட்டு மக்களுக்காக மாநகராட்சியா? இல்லை மக்களை வாட்டும் மாநகராட்சியா கேட்பதற்கு நாதியில்லை. கேட்க வேண்டிய எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகத்தைக் காணவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவோடு இரவாக இந்தப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் ஒட்டியது யார் என்று தெரியவில்லை. இப்படிக்கு எட்டிமடை சண்முகத்தை ஊரெல்லாம் தேடும் தொகுதி மக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்பார்த்து ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ-வின் விசுவாசிகள் அந்தப் போஸ்டரைக் கிழித்தெறிந்தனர். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு