Election bannerElection banner
Published:Updated:

’எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வருபவர்கள் எதையும் எடுத்துவர வேண்டாம்’ – திருச்சி மாநகர காவல்துறை அறிவிப்பு

திருச்சியில் இன்று நடக்கவுள்ள  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வருபவர்கள், கையில்  எதையும் எடுத்துவரக் கூடாது என  திருச்சி மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது, விழா மேடையின் முன்பு, 2 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில், இன்று திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு வரும் தொண்டர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க திருச்சி மாநகர காவல்துறை தயார் ஆகி வருகிறது.
இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண், திருச்சி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு திருச்சி மாநகரம், திருச்சி மாவட்டம்
மட்டுமல்லாமல், திருச்சியை அடுத்துள்ள பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அதிக அளவில் பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும் பொதுமக்கள் உணவுப் பொருள்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் மற்றும் வேறு எந்தப் பொருள்களையும் பாதுகாப்பு காரணங்களுக்காக விழா மைதானத்துக்கு எடுத்து வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றும், குடிநீர் பாட்டில்கள் விழா மைதானத்தில் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு