Election bannerElection banner
Published:Updated:

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நடராசன் புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நடராசன் புகைப்படம்!
மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நடராசன் புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நடராசன் புகைப்படம்!

சசிகலா கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னை சோளிங்கநல்லூரில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடந்தது. மருத்துவமனையில் இருக்கும் தனது கணவரைக் காண, சிறையில் இருக்கும் சசிகலா பரோலில் வெளியே வந்தார். 

ஐந்து நாள் பரோலில் வந்த சசிகலா, தினமும் நடராசனை மருத்துவமனைக்கு வந்து பார்த்துச் சென்றார். தற்போது நடராசன் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவருகிறார். தற்போது அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் நடராசன் சிகிச்சைபெறும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையதளங்களில் பரவிவருகிறது. அதில் அவர் மருத்துவமனை உடையில்  இருப்பது போன்றும் அவருடன் மருத்துவர்கள் இருப்பது போன்றும் உள்ளது. எனினும் இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு