சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, நெருங்கி வரும் தே.மு.தி.க என அடுத்தடுத்த சாதகமான அம்சங்கள் தி.மு.க-வை மிகுந்த உற்சாகத்தில் தள்ளி உள்ளன. தி.மு.க இனி ஆட்சிக்கட்டிலில் அமருமா என சந்தேகத்தில் இருந்த தி.மு.க-வினர் எல்லாம், 2016-ல் தி.மு.க ஆட்சி அமைவது உறுதி என பேசத் தொடங்கிவிட்டனர். ‘முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்தான்’ என கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லையே தவிர, மேடைதோறும் ‘வருங்கால முதல்வர்’ என ஸ்டாலினை அழைக்கத் தொடங்கிவிட்டனர் தி.மு.க-வினர். ஸ்டாலினிடமும் இந்த உற்சாகத்தைக் காண முடிகிறது.
இதனால் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, இலவச திருமணங்கள் நடத்திவைக்கும் விழா, கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தொழில் முனைவோருடனான சந்திப்பு என பரபரப்பு காட்டும் அவர், மறுபுறம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மனம் திறந்த கடிதம், அரசின் மீதான விமர்சனங்கள் என சட்டமன்றத் தேர்தல் முஸ்தீபுகளில் இறங்கிவிட்டார்.

“அடுத்த ஆண்டு மே மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க ஆட்சி மலரும். தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைவது உறுதி” என சென்னையில் மே தின விழாவில் பேசிவிட்டு, மூன்று நாள் பயணமாக கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் தொடங்கி, அன்னூர், மேட்டுப்பாளையம், குன்னூர் என அனைத்து இடங்களிலும் வழக்கத்தைவிட சிறப்பான வரவேற்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது.

குன்னூரில் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவை நடத்திய நீலகிரி மாவட்ட தி.மு.க-வினர், விழா நடத்த குன்னூர் புனித ஜோசப் கல்லூரி ஆடிட்டோரியத்தைக் கேட்டனர். இந்தக் கல்லூரியில்தான் கடந்த ஆண்டு ஜெயலலிதா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார் என்பதாலும், அ.தி.மு.க ஆட்சி என்பதாலும் இங்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில்தான் கல்லூரி நிர்வாகத்தைத் தி.மு.க-வினர் அணுகியுள்ளனர். முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் வருகிறார் எனச் சொல்லி, நீலகிரி மாவட்டச் செயலாளர் முபாரக், கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டார். ‘முன்னாள் துணை முதல்வர் எனச் சொல்ல வேண்டாம். வருங்கால முதல்வர் எனச் சொல்லுங்கள்’ என்று கூறி, அனுமதி கொடுத்ததோடு், விழாவில் கலந்துகொண்டு ஸ்டாலினை வாழ்த்தியும் பேசினார் கல்லூரியின் முதல்வர் டோம்னிக் ஜேக்கப்.

விழாவில் பேசிய ஆ.ராசா, “இங்கே பேசியவர்கள் எல்லோரும் தமிழகத்தை ஆளப்போகிறவர் நீங்கள்தான் என ஸ்டாலினைப் பார்த்துச் சொன்னார்கள். அது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று” என்றார். வழக்கமாக, ஸ்டாலினை அடுத்த முதல்வர் என யாராவது அறிவித்தால், அதை மறுத்து, ‘அடுத்த முதல்வர் கலைஞர்தான்’ எனச் சொல்லும் ஸ்டாலின், இந்த முறை அடுத்த முதல்வர் என தன்னை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட அனைவரும் குறிப்பிட்டதைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.

ஸ்டாலின் பேசும்போது, “தமிழகத்தில் கல்வி நிலை மோசமாக இருப்பதாக பள்ளியின் முதல்வர் வேதனையோடு குறிப்பிட்டார். இதைப்பற்றி முதல்வரும் கவலைப்பட வேண்டியது இல்லை. நீங்களும் கவலைப்பட வேண்டியது இல்லை. நல்ல ஆட்சியாக தமிழகத்தில் தி.மு.க ஆட்சி உருவாகும். அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்.

அ.தி.மு.க-வுக்கு இது ஐந்தாண்டு அல்ல... இறுதி ஆண்டு’’ எனப் பேசியவர், 1,367 மாணவர்களுக்கு சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக மேடையில் நின்று கல்வி உதவித்தொகையை வழங்கி, அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டுதான் அங்கிருந்து புறப்பட்டார்.

மூன்றாவது நாள் கோவையில் தனது 63-வது பிறந்த நாளையொட்டி ஏற்பாடு செய்திருந்த 115 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொண்டார். 115 ஜோடிகளுக்கும் தனித்தனியாக அவரே தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

விழாவில் பேசிய மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும், தி.மு.க ஆட்சி 2016-ல் அமைவது உறுதி என்றும், அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல ஆர்ப்பரித்தது கூட்டம்.
விழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், “கடந்த 3 நாட்கள் ஸ்டாலினின் வருகை மேற்கு மண்டலத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து ஸ்டாலின்தான் முதல்வர். எல்லாத் துறைகளிலும் தமிழகம் முன்னேற இருக்கிறது. எனவே யாரும் கவலைப்பட வேண்டியதில்லை” என்றார். ஆ.ராசா, “பேரறிஞர் அண்ணா அனைத்துத் தலைவர்களையும் விமர்சித்து வந்தபோது, டெல்லியில் அவரை சந்தித்த பத்திரிகையாளர்கள், ‘நீங்கள் எல்லோரையும் விமர்சிக்கிறீர்கள். தலைவருக்கான தகுதியாக எதைப் பார்க்கிறீர்கள் எனக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அண்ணா, ‘தினந்தோறும் புதிராய், தேடுதலுக்கு உட்பட்டவராய் இருக்கக் கூடியவர்தான் தலைவர்’ என்றார். அப்படி பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் தேடுதலுக்கும் ஆச்சர்யத்துக்கும் உட்பட்டவர்தான் ஸ்டாலின். தமிழகம் எதிர்பார்க்கக் கூடிய தலைவராக ஸ்டாலின் இருக்கிறார்’’ என்று படபடத்தார்.

ஸ்டாலின், “ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி விரைவில் தீர்ப்பளிக்க இருக்கிறார். தற்போதைய அ.தி.மு.க ஆட்சி இயங்காத அரசாக, பன்னீர்செல்வம் செயல்படாத முதல்வராக இருக்கிறார். தமிழகத்தில் சிறப்பான ஆட்சி உருவாக வேண்டும் என்றால், அது தி.மு.க ஆட்சிதான். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்’’ என்றார்.

தி.மு.க. தனது தேர்தல் பயணத்தைத் தொடங்கிவிட்டது.

- ச.ஜெ.ரவி
படங்கள்: தி.விஜய்