Published:Updated:

பா.ஜ. தலைவராக நிதின்கட்கரி மீண்டும் தேர்வு!

பா.ஜ. தலைவராக நிதின்கட்கரி மீண்டும் தேர்வு!
பா.ஜ. தலைவராக நிதின்கட்கரி மீண்டும் தேர்வு!
பா.ஜ. தலைவராக நிதின்கட்கரி மீண்டும் தேர்வு!

சூரஜ்கண்ட்: பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவராக இரண்டாவது முறையாக நிதின்  கட்கரி  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜனதா தேசிய செயற்குழுக்கூட்டம் ஹரியானா மாநிலம் சூரஜ்கண்டில் நடைபெற்று  வருகிறது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் நிதின் கட்கரி தேர்வு  செய்யப்பட்டார்.

முன்னதாக சில மாதங்களுக்கு முன்,மும்பையில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில்,  கட்சியின் தலைவராக, ஏற்கனவே பதவி வகித்த ஒருவரை, மீண்டும் தலைவராக தேர்வு  செய்யும் வகையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, விதிகளில் திருத்தங்கள்  செய்யப்பட்டன.

கட்காரியின் பதவிக்காலம், டிசம்பரில் முடிவடைய உள்ள நிலையில், அவர் மீ்ண்டும்  ‌தேசிய தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இவர் 2015 டிசம்பர் வரை  தலைவராக தொடர்வார்.