Published:Updated:

சோனியாவின் சிகிச்சைக்கு ரூ.1,880 கோடி செலவு: மோடி

சோனியாவின் சிகிச்சைக்கு ரூ.1,880 கோடி செலவு: மோடி
சோனியாவின் சிகிச்சைக்கு ரூ.1,880 கோடி செலவு: மோடி
சோனியாவின் சிகிச்சைக்கு ரூ.1,880 கோடி செலவு: மோடி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,கடந்த 3 ஆண்டுகளாக

சோனியாவின் சிகிச்சைக்கு ரூ.1,880 கோடி செலவு: மோடி

வெளிநாட்டில்  சிகிச்சை பெற்றதற்கு ரூ.1,880 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அனுமதி  அளித்தது யார் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நரேந்திர மோடி கேள்வி  எழுப்பியுள்ளார்.

"ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இந்த வீண் செலவுக்கு யார் அனுமதி  அளித்தார்கள் ? இந்த வீண் செலவை செய்தவர்களை நாம் மன்னிக்கலாமா? ”என்று   குஜராத் முதலமைச்சரும்,பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான நரேந்திர மோடி  கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் சோனியாவின் வெளிநாட்டு பயணம் மற்றும் வெளிநாட்டு  மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1,880 கோடி செலவழிக்கப்படும்போது,குஜராத் மாநிலம்  விழாக்களுக்காக செலவழிப்பது குறித்து கேள்வி எழுப்புவது ஏன்? என்றும் மோடி கேள்வி  எழுப்பியுள்ளார்.

##~~##
சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய முதலீடுக்கு அனுமதி அளித்ததற்காக மத்திய  ஐ.மு. கூட்டணி அரசை தொடர்ந்து குறை கூறிய அவர்,அமெரிக்கா தனது சில்லரை  வர்த்தகர்களையும்,கடைகளையும் பாதுகாக்க முயற்சிக்கும்போது,இந்திய பிரதமரோ  இந்திய இளைஞர்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்கிறார் என்று மோடி மேலும்  கூறியுள்ளார்.
காங்கிரஸ் பதிலடி 
இதனிடையே மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ்  கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், மோடி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால்  பயிற்றுவிக்கப்பட்டவர் என்றும்,பொய் சில்ல அவர் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார் என்றும்  கூறியுள்ளார்.
சுவாமி பொதுநலன் வழக்கு
இதனிடையே சோனியாவின் வெளிநாட்டு மருத்துவ சிகிச்சைக்காகரூ.1,880 கோடி  செலவழிக்கப்பட்டுள்ளதாக மோடி கூறியுள்ளதை வைத்து, சோனியாவுக்கு எதிராக  பொதுநலன் வழக்கு தொடரப்போவதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி  தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.