Published:Updated:

சபாநாயகர் தேர்தல்: அதிமுக வேட்பாளராக தனபால் அறிவிப்பு!

சபாநாயகர் தேர்தல்: அதிமுக வேட்பாளராக தனபால் அறிவிப்பு!
சபாநாயகர் தேர்தல்: அதிமுக வேட்பாளராக தனபால் அறிவிப்பு!
சபாநாயகர் தேர்தல்: அதிமுக வேட்பாளராக தனபால் அறிவிப்பு!

சென்னை:தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியிலிருந்து ஜெயக்குமார் பதவி  விலகியதை தொடர்ந்து,நடைபெற உள்ள புதிய சபாநாயகர் தேர்தலில் அதிமுக  வேட்பாளராக தனபால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா  வெளியிட்ட அறிக்கையில், "10-10-2012 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு  சட்டமன்ற பேரவை தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக அதிகாரப்பூர்வ  வேட்பாளராக ராசிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.தனபால் நிறுத்தப்படுகிறார்"  என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக  அறிவிக்கப்பட்டு உள்ள பி.தனபால்,நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதியில் இருந்து  அதிமுக சார்பில் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

போட்டியின்றி தேர்வு


சட்டசபையில் அதிமுக உறுப்பினர்கள் பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், கடந்த  முறை டி.ஜெயக்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது போலவே, இப்போது அதிமுக  வேட்பாளர் பி.தனபாலும் போட்டியின்றி புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

சபாநாயகர் தேர்தலில் போட்டி இருந்தால் தேர்தல் நடத்தப்படும்.அவ்வாறு  போட்டியில்லை என்றால்,புதிய சபாநாயகராக பி.தனபால் ஒருமனதாக  தேர்ந்தெடுக்கப்படுவார்.

முன்னதாக சட்டமன்ற பேரவை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்ட  அறிக்கையில்,"தமிழ்நாடு ஆளுனர் கே.ரோசய்யா இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு  174 (1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டத்தை ஏற்கனவே அறிவித்த  அக்டோபர் 30-ம்தேதிக்கு பதிலாக, அக்டோபர் 10-ம் தேதி புதன்கிழமை காலை 10  மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில்  கூட்டி இருக்கிறார்.

##~~##
டி.ஜெயக்குமார் சபாநாயகர் பதவியில் இருந்து விலகியுள்ளதால் ஏற்பட்டுள்ள  வெற்றிடத்தை நிரப்புவதற்காக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 7(1)-ன் கீழ்,  வருகிற 10-ந்தேதி புதன்கிழமை அன்று சபாநாயகர் தேர்தலை நடத்த கவர்னர்  கே.ரோசய்யா அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
சட்டப்பேரவை விதி 7 (2)-ன் கீழ், வரும் 9-ந்தேதி செவ்வாய்க்கிழமை, நண்பகல் 12  மணி வரையில் சட்டப்பேரவை தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் சட்டப்பேரவை  செயலாளரால் பெற்றுக் கொள்ளப்பெறும். வேட்பு மனுக்களை செயலாளரிடம் இருந்து  பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறப்பட்டு உள்ளது.