Published:Updated:

காவிரி: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் இன்று சீராய்வு மனு

காவிரி: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் இன்று சீராய்வு மனு
காவிரி: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் இன்று சீராய்வு மனு
காவிரி: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் இன்று சீராய்வு மனு

பெங்களூர்: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று அறிவுறுத்திய  உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக அரசு   உச்ச  நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்கிறது.

டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில்  அதன் தலைவரான பிரதமர் மன்மோகன்சிங் தமிழகத்திற்கு தினமும் 9 ஆயிரம் கன அடி  தண்ணீர் வீதம் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.ஆனால் இந்த  முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காவிரி ஆணைய  கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இந்த நிலையில் காவிரி ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு விசாரணைக்கு வந்தபோது,  காவிரி ஆணைய தலைவரின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தினசரி வினாடிக்கு 9,000  கன அடி தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று கர்நாடகத்திற்கு நீதிமன்றம்  உத்தரவிட்டது.

இந்நிலையில் பிரதமர் தனது உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரி காவிரி  ஆணையத்துக்கு கர்நாடக அரசு சார்பில் அவசர மனு அனுப்பப்பட்டது.இதன் மீது மத்திய  அரசு உடனே முடிவு எடுக்காததை அடுத்து கடந்த 29-ம் தேதி நள்ளிரவு முதல் உச்ச  நீதிமன்றம் உத்தரவை ஏற்று கர்நாடக அரசு தமிழகத்தற்கு காவிரி நீரை திறந்துவிட்டு  உள்ளது.

##~~##
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் மண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும்  பல்வேறு கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று பிறப்பித்த  உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு, காவிரி நதிநீர் ஆணையத்துக்கு  உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் இன்று சீராய்வு மனு  தாக்கல் செய்யப்பட இருப்பதாக அந்த மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்  தெரிவித்துள்ளார்.