Published:Updated:

திமுக மனித சங்கிலி: இளைஞர் அணிக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!

விகடன் விமர்சனக்குழு
திமுக மனித சங்கிலி: இளைஞர் அணிக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
திமுக மனித சங்கிலி: இளைஞர் அணிக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
திமுக மனித சங்கிலி: இளைஞர் அணிக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!

சென்னை: வருகிற 5 ம் தேதியன்று திமுக நடத்த உள்ள மனிதச் சங்கிலிப்  போராட்டத்துக்கு கறுப்பு உடை அணிந்து பங்கேற்குமாறு அக்கட்சியின் இளைஞர் அணிக்கு  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொருளாளரும், இளைஞரணி செயலாளருமான மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தற்போதையை ஆட்சியில்,வரலாறு காணாத  மின்வெட்டு,கொலை - கொள்ளை - வழிப்பறி - கற்பழிப்பு அன்றாடச்  செய்திகளாகிவிட்ட அவலம் -ஏழை,எளிய, நடுத்தர மக்களின் அத்தியாவசிய அன்றாடத்  தேவைகளான பால்விலை உயர்வு - பஸ் கட்டணம் உயர்வு -மின் கட்டணம் உயர்வு,  அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களுமே விலை உயர்வு.

இதனால் அனைத்துத் தரப்பினருமே பாதிப்புக்குள்ளாகின்றனர். அரசு ஊழியர்கள் -  ஆசிரியப் பெருமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

##~~##
மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையால்,  தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவையும் - விலை உயர்வையும் திசை  திருப்பும் நோக்கோடு எதிர்க்கட்சியினர் மீது பொது வழக்குகள் புனைந்து குண்டர் சட்டம்  உள்ளிட்ட கொடுமையான சட்டங்களில் கைது செய்வதையும் - அவதூறான செய்திகளை  வெளியிடுவதையும் வாடிக்கையாக்கிவிட்டனர்.
இத்தகைய இழிசெயலில் ஈடுபடும் அதிமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக்  கண்டித்து தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திமுக தலைமைச்  செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி,அக்டோபர் 5 ஆம் தேதி,  வெள்ளியன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை,தமிழகம்  முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் கருப்புடை அணிந்த மனித  சங்கிலியும் அமைத்து ஆர்ப்பாட்டங்களில் இளைஞர் அணியினர் பெருமளவில் பங்கேற்று,  தமது உணர்வுகளை வெளிப்படுத்திட வேண்டும்.
அதற்கான பணிகளில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் இளைஞர்  அணி அமைப்புகள் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமாறு கேட்டுக்  கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.