Published:Updated:

சோனியா சிகிச்சைக்கு அரசு பணம் செலவழிக்கப்படவில்லை: சிஐசி

விகடன் விமர்சனக்குழு
சோனியா சிகிச்சைக்கு அரசு பணம் செலவழிக்கப்படவில்லை: சிஐசி
சோனியா சிகிச்சைக்கு அரசு பணம் செலவழிக்கப்படவில்லை: சிஐசி
சோனியா சிகிச்சைக்கு அரசு பணம் செலவழிக்கப்படவில்லை: சிஐசி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,தனது சொந்த பணத்தில்தான்  வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை செய்துகொண்டாரே தவிர, அவருக்கான சிகிச்சைக்கு  அரசுப்பணம் செலவழிக்கப்படவில்லை என்று மத்திய தகவல் ஆணையம்  தெரிவித்துள்ளது.

சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1,880 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக,  குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமையன்று குற்றம்  சாட்டியிருந்தார்.

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.இக்குற்றச்சாட்டை காங்கிரஸ் பொதுச்  செயலாளர் திக் விஜய் சிங் கடுமையாக மறுத்ததோடு,மோடியையும் கடுமையாக  சாடியிருந்தார்.

இதனையடுத்து சோனியாவின் சிகிச்சைக்கு எவ்வளவு செலவானது;அதனை யார் செலவு  செய்தார்கள் என்ற விவரத்தை தெரிவிக்குமாறு பா.ஜனதா கட்சி கோரியது.

##~~##
இந்நிலையில் சோனியாவின் சிகிச்சை செலவு தொடர்பாக சத்யானந்தா மிஸ்ரா என்பவர்,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்த கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய  தகவல் ஆணையம் (Central Information Commission - CIC),  சோனியா  காந்தி,தனது சொந்த பணத்தில்தான் வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை  செய்துகொண்டாரே தவிர, அவருக்கான சிகிச்சைக்கு அரசுப்பணம்  செலவழிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. .
முன்னதாக சத்யானந்தா மிஸ்ராவின் கேள்விக்கு பெறப்பட்ட தகவலின் அடிப்படையில்  ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையிலேயே தாம் சோனியாவின் சிகிச்சை  செலவுக்கு ரூ.ரூ.1,880 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது என தாம் தெரிவித்ததாக  மோடி கூறியிருந்தார்.
ஆனால் தமக்கு இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும்,மோடி எங்கிருந்து  இந்த தகவலை பெற்றார் என்பது குறித்து தமக்கு எதுவும் தெரியவில்லை என்றும் கடந்த  சனிக்கிழமையன்று சத்யானந்தா மிஸ்ரா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.