Published:Updated:

கருணாநிதி தலைமையில் டெசோ ஆலோசனை கூட்டம்!

கருணாநிதி தலைமையில் டெசோ ஆலோசனை கூட்டம்!
கருணாநிதி தலைமையில் டெசோ ஆலோசனை கூட்டம்!
கருணாநிதி தலைமையில் டெசோ ஆலோசனை கூட்டம்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ ஆலோசனை கூட்டம்
அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

திமுக தலைமை  அலுவலகமான  அண்ணா அறிவாலயத்தில் டெசோ அமைப்பின்  கலந்துரையாடல் கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில்  தொடங்கியது.கூட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

டெசோ அமைப்பின் உறுப்பினர்களான திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்,திராவிடர்  கழக தலைவர் கி.வீரமணி,சுப்புலட்சுமி ஜெகதீசன்,விடுதலை சிறுத்தை தலைவர்  திருமாவளவன் மற்றும் மு.க.ஸ்டாலின்,எம்.பிக்கள் டி.ஆர்.பாலு,  டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

##~~##
இக்கூட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி நடந்த டெசோ மாநாட்டில்  நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்களை ஐ.நா. சபை செயலர் மற்றும் ஜெனீவாவில்  உள்ள மனித உரிமை ஆணையரிடம் சமர்பிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த தீர்மானங்களை ஐ.நா சபையில் வழங்க,திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் 6 -ம் தேதி நியூயார்க் செல்கிறார்.அவருடன் டி.ஆர்.பாலும் செல்ல இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.