Published:Updated:

'மழைநீர் வடிகால் வரைபடங்கள் எங்கே?' சென்னை மாநகராட்சிக்கு அறப்போர் இயக்கத்தின் கேள்வி

'மழைநீர் வடிகால் வரைபடங்கள் எங்கே?' சென்னை மாநகராட்சிக்கு அறப்போர் இயக்கத்தின் கேள்வி

'மழைநீர் வடிகால் வரைபடங்கள் எங்கே?' சென்னை மாநகராட்சிக்கு அறப்போர் இயக்கத்தின் கேள்வி

'மழைநீர் வடிகால் வரைபடங்கள் எங்கே?' சென்னை மாநகராட்சிக்கு அறப்போர் இயக்கத்தின் கேள்வி

'மழைநீர் வடிகால் வரைபடங்கள் எங்கே?' சென்னை மாநகராட்சிக்கு அறப்போர் இயக்கத்தின் கேள்வி

Published:Updated:
'மழைநீர் வடிகால் வரைபடங்கள் எங்கே?' சென்னை மாநகராட்சிக்கு அறப்போர் இயக்கத்தின் கேள்வி

‘ கடந்த 2016 -17-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த சென்னை மாநராட்சி, சென்னையில் உள்ள சாலை கட்டமைப்பு வசதிகளுக்காக 2,170.25 கோடி ரூபாயையும், மழை நீர் வடிகால்வாய்களுக்கு 415 கோடி ரூபாயையும் ஒதுக்கியிருந்தது. இப்படிக் கோடிகோடியாய் ஒதுக்குற நிதியை, சென்னை மாநகராட்சி முழுமையாகச் செயல்படுத்துவதில்லை’’  என்று குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். ‘‘சாலை மேம்பாலம் உள்ளிட்ட பல பணிகளும் ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களுக்கே வழங்கப்படுவதுடன், அதில் கமிஷன் கொள்ளையும் நடக்கிறது’’ என அவர்கள் கொதிக்கிறார்கள். 

கடந்த நான்கு நாள்களாகச் சென்னையில் மழை பெய்து வருகிறது. மழை பெய்யும் சில மணித்துளிகளிலேயே சாலைகளில் தண்ணீர் தேங்க ஆரம்பித்துவிடுகிறது. இதனால்,போக்குவரத்து நெரிசல்,சாலையைக் கடக்க முடியாத நிலைமை எனச் சென்னை மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். அதே நேரத்தில், சென்னைப் புறநகர்ப் பகுதியை ஒட்டியுள்ள மக்களுக்கு வீடுகளில் வசிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதிலும் சென்னை மையப் பகுதியில் இரண்டு பெண்கள் சாலையைக் கடக்க முடியாமல் தண்ணீரில் தத்தளித்த போது இந்த அரசின் செயல்பாட்டை மிகக் கடுமையாகத் திட்டித் தீர்த்ததோடு.‘‘இந்தத் தண்ணீரில் எடப்பாடி பழனிசாமியையும்,பன்னீர்செல்வத்தையும் நடக்கவைக்க வேண்டும்’’ என்று புலம்பியபடியே சென்றனர்.

சென்னையின் இந்தப் பாதிப்பு குறித்து, நீர்நிலைகளைப் பாதுகாக்கும்  பணியில் போராடிவரும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசியபோது, ‘‘சென்னை மாநகராட்சியில் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய்கள் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளன. அந்த வடிகால்வாய்கள் மூலம் வெளியேறும் தண்ணீர், ஆறுகளையோ அல்லது கடலையோ சென்றடைய வேண்டும். ஆனால், இங்கு கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டமைப்பு ஒருபக்கம் தொடர்பில்லாமல் உள்ளது. அப்படியே தொடர்பில்லாமல் இருந்தாலும் அவை தூர்வாரப்படாமல் உள்ளது. நிர்நிலைகளைத் தூர்வாரும் பணியில் பொதுப்பணித் துறையின் செயல்பாடு என்பது பூஜ்ஜியம் அளவில்தான் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 31-ம் தேதி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு என எட்டரைக் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தூர்வார வேண்டிய பணியைத் தற்போது அவசர அவசரமாகச் செய்து வருகிறார்கள். மழை வரும்போது எப்படித் தூர்வார முடியும்? புழல்,செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிக்காக 2017-18-ம் ஆண்டு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை அந்தந்த பஞ்சயாத்துகளில் உள்ள விவசாயச் சங்கங்களை ஒருங்கிணைத்துச் சங்கத்தைச் சார்ந்த பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் அவ்வாறு செய்யாமல் ஆளும் கட்சியைச் சேர்ந்த கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு அந்தப் பணியை ஒதுக்கியுள்ளது. 

நடப்பாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியிலேயே இந்த மோசடி என்றால், 2016-17-ம் ஆண்டில் நீர்நிலைகள் மராமத்துப் பணிக்காக ஒதுக்கப்பட்ட

100 கோடி ரூபாய் நிதி குறித்து கூவத்தூரில் மிகப் பெரிய டீலிங் நடந்ததாகக் தகவல் வெளியாகி உள்ளது. கூவத்தூரில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டபின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த நிதியாண்டு முடிவதற்குள் அவசர அவசரமாக ஒருசில இடங்களில் மராமத்துப் பணியைத் தொடங்கிவைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அரசாங்கம் செயல்படுத்துகிற திட்டங்களில் ஊழல் மட்டுமே நடந்தால், அந்தத் திட்டம் எப்படி மக்களை முழுமையாகச்  சென்றடையும். குறிப்பாகச் சொல்வதென்றால், சென்னை மாநகராட்சியும் பொதுப்பணித் துறையும் இணைந்துசெய்ய வேண்டிய இந்த வேலையில் 30 சதவிகிதப் பணிகள்கூட நடக்கவில்லை என்பதுதான் உண்மை. அப்படி நடந்திருப்பதாக ஆள்பவர்கள் சொன்னால், மழை நீர் வடிகால்வாய்கள் மற்றும் நீர்வழித்தடங்கள் குறித்த விரிவான வரைபடங்களை ஏன் சென்னை

மாநகராட்சி வெளியிடாமல் உள்ளது? அதனை வெளிப்படையாக இணையத்தில் வெளியிடாமல் இருப்பது ஏன்’’ என்றார் .

இதுகுறித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ, ‘‘சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து முழுவிவரம் வந்துகொண்டிருந்த நிலையில்... அமைச்சர் ஜெயக்குமார், ‘மழைபெய்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும்’ எனப் பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறார். இந்தப் பதிலை அவர் சொல்வதற்குத்தான் மக்கள் பிரதிநிதியாக அவரைத் தேர்ந்தெடுத்துச் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்தோமா? ஒவ்வோர் ஆண்டும் அரசாங்கம் வெளியிடும் ஆடிட்டை எடுத்துப் பார்க்கும்போது. அதில், முறையாக மழை நீர் வடிகால்வாய்கள் இணைக்கப்படவில்லை என்பது தெரியவருகிறது. கிட்டத்தட்ட மக்களிடம் 400 கோடி ரூபாய் வரிப்பணம் அரசுக்கு வசூலாகியுள்ளது. அப்படியிருக்கையில், அதையெல்லாம் முறையாகச் செய்யாமல் மக்களை வெள்ளத்தில் தள்ளிவிடுவதே இந்த அரசின் தலையாயக் கடமையாகச் செய்துகொண்டிருக்கிறது. புதிதாகப் போடப்படும் திட்டங்களும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே கமிஷனுக்காக ஒதுக்கப்படுகிறது. ஒட்டுமொத்த இந்த அரசாங்கத்தை ஆள்பவர்களின் நடவடிக்கையும் எதை எப்படிச் செய்தால் பணம் கிடைக்கும் என்ற நிலையிலேயே உள்ளது. அப்படியிருக்கும்போது வேறு என்ன செய்ய முடியும்? மக்கள், தண்ணீரிலும் கண்ணீரிலும் தள்ளத்தானேப்படுவார்கள்’’ என்றார் கொதிப்புடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism