Published:Updated:

தமிழக அமைச்சசரவை மாற்றம்; சி.வி. சண்முகம் நீக்கம்!

விகடன் விமர்சனக்குழு
தமிழக அமைச்சசரவை மாற்றம்; சி.வி. சண்முகம் நீக்கம்!
தமிழக அமைச்சசரவை மாற்றம்; சி.வி. சண்முகம் நீக்கம்!
தமிழக அமைச்சசரவை மாற்றம்; சி.வி. சண்முகம் நீக்கம்!

சென்னை: தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து  சி.வி. சண்முகம் நீக்கப்பட்டுள்ளார்.அவருக்குப்பதிலாக பி.வி. ரமணா அப்பதவியில்  நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊரகத் தொழில்துறை அமைச்சராக பி.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஊரகத்  தொழில்துறை அமைச்சர் சம்பத் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகிறார்.இவர் வருகிற 6 ம் தேதியன்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பொறுப்பை ஏற்க உள்ளார்.

பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதிக்கு கூடுதலாக சட்டம் மற்றும் சிறைத் துறை  ஒதுக்கப்பட்டுள்ளது.   

##~~##
மேலும் பா.வளர்மதிக்கு மதிய உணவு துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சி.வி. சண்முகம்
இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் நீக்கப்பட்ட சி.வி. சண்முகத்தை,விழுப்புரம் அதுமுக வடக்கு  மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கி கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா இன்று காலை உத்தரவிட்டிருந்தார். 

இது தவிர வடசென்னை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பிலிருந்து பி.வெற்றிவேல் எம். எல்.ஏ.வும், தென்சென்னை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜி.செந்தமிழன் எம்.எல்.ஏ. ஆகியோரையும் அவர்களது கட்சி பொறுப்பிலிருந்து ஜெயலலிதா இன்று காலை உத்தரவிட்டிருந்தார்.

இதில் வெற்றிவேல் முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமாரின் ஆதரவாளர் எனக்கூறப்படுகிறது.

அண்மையில் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் துரைசாமியுடன் வட சென்னை பகுதியை சேர்ந்த அதிமுக கவுன்சிலர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இவர்கள் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் எனக் கூறப்பட்ட நிலையில்,வட சென்னை பகுதியை சேர்ந்த 10 க்கும் அதிகமான அதிமுகவினர்,கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் எனக்கூறப்பட்ட நிலையில்,இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஜெயக்குமார் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியிலிருந்து கடந்த வாரம் விலகினார்.

இந்நிலையில் இன்று கட்சி மட்டத்திலும்,அமைச்சரவையிலும் ஜெயலலிதா மேற்கொண்டுள்ள மாற்றங்கள் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 வதுமுறை அமைச்சரவை மாற்றம்

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவை கடந்த 2011 ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றதிலிருந்து இன்றுவரை 8 வது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,