Published:Updated:

அமைச்சர் எம்.சி.சம்பத் ஓர் ஊழல் பேர்வழி: ஆளும்கட்சி எம்.எல்.ஏ

அமைச்சர் எம்.சி.சம்பத் ஓர் ஊழல் பேர்வழி: ஆளும்கட்சி எம்.எல்.ஏ
அமைச்சர் எம்.சி.சம்பத் ஓர் ஊழல் பேர்வழி: ஆளும்கட்சி எம்.எல்.ஏ

அமைச்சர் எம்.சி.சம்பத் ஓர் ஊழல் பேர்வழி: ஆளும்கட்சி எம்.எல்.ஏ

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஓர் ஊழல் பேர்வழி, அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன்.


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி பிரச்னைகள் குறித்து, இன்று மாவட்ட ஆட்சித்தலைவரைச் சந்தித்து மனுகொடுத்தார் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "என்.எல்.சி நிர்வாகம் ஐந்து சதவிகித பங்குகளைத் தனியாருக்கு விற்பனைசெய்ய முயற்சி செய்துவருகிறது. இதனால், என்.எல்.சி.யில் பணிபுரிந்துவரும் 25 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படும். இதுகுறித்து, தொழில்துறை அமைச்சரான எம்.சி.சம்பத் தொழிலாளர்களின் நலனில் சிறிதும் அக்கறையில்லாமல்  செயல்பட்டுவருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அதேபோல், கரும்பு விவசாயிகள் நிலுவை தொகையினை பெறமுடியாமல் அவர்கள் மனஉலைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அத்தொகையைப் பெற்றுத்தர முயற்சி செய்யாமல், சர்க்கரை ஆலைகளின் நிர்வாகத்துக்கு ஆதரவாகவே அவர் செயல்பட்டுவருகிறார். பருவமழை தாக்குதலிலிருந்து மாவட்ட மக்களைப் பாதுகாக்க எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அவர் எடுத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. ஜவான்பவன் சாலை விவகாரத்தில் ஒரு கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார் அமைச்சர். இது சம்பந்தமாகப் பொதுநல அமைப்புகள் அவர்மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது. விரைவில் அது வெளிச்சத்துக்கு வரும். இவரைப் போன்ற ஆட்களை வைத்துதான் அன்றைக்கு ஓ.பன்னீர்செல்வம் இதை ஊழல் ஆட்சி என்று சொல்லியிருப்பார். மழையால் சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆஸ்திரேலியா போகிறார். அம்மா இருந்திருந்தால் இப்படி நடக்குமா. மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசு இது" என்றார்.   
                               

அடுத்த கட்டுரைக்கு