Published:Updated:

சோனியா மருமகன் நிலம் வாங்கியதில் முறைகேடு: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

சோனியா மருமகன் நிலம் வாங்கியதில் முறைகேடு: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
சோனியா மருமகன் நிலம் வாங்கியதில் முறைகேடு: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
சோனியா மருமகன் நிலம் வாங்கியதில் முறைகேடு: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட்  வதேரா, டிஎல்எப் நிறுவனத்தின் சட்டவிரோத உதவியுடன் சொத்துக்களை வாங்கி  குவித்ததாக ஊழலுக்கு எதிரான அமைப்பின் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் இக்குற்றச்சாட்டைக் கூறிய அவர்,50  லட்சம் ரூபாயாக இருந்த ராபர்ட் வதேராவின் சொத்து மதிப்பு,கடந்த 4 ஆண்டுகளில்  300 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும்,இதன் தற்போதைய மதிப்பு 500 கோடி  ரூபாய் என்றும் தெரிவித்தார்.

மேலும் டிஎல்எப் நிறுவனத்திடமிருந்து சட்டவிரோதமான முறையில் ராபர்ட் வதேரா  ஆதாயம் அடைந்துள்ளதாகவும், வதேராவுக்கு 65 கோடி ரூபாயை எவ்வித  உத்தரவாதமும் இன்றி அந்நிறுவனம் கடனாக கொடுத்துள்ளதாகவும், இந்த தொகையை  கொண்டு, டிஎல்எப் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களையே வதேரா வாங்கி  உள்ளதாகவும் குற்றம் சாட்டிய கெஜ்ரிவால், தனது சொத்துக்களையே ஒருவர் வாங்க  அவருக்கு ஏன் டிஎல்எப் நிறுவனம் கடன் வழங்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

##~~##
மேலும் அவ்வளவு மலிவான விலைக்கு டிஎல்எப் நிறுவனம்,வதேராவுக்கு சொத்துக்களை  விற்றது ஏன்? பதிலுக்கு வதேராவிடமிருந்து டிஎல்எப் நிறுவனம் பெற்ற ஆதாயம் என்ன?  என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் அரவிந்த் கெஜ்ரிவால்குழுவை சேர்ந்த பிரசாந்த் பூஷண் கூறுகையில்,
"ரூ.300 கோடி மதிப்பிலான இந்த சொத்தை ரூ. 50 லட்சம் கொடுத்து பெற்றுள்ளார்.  இது தொடர்பான பத்திரப்பதிவுக்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இதன் மூலம் ராபர்ட்  வதோதரா முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்” என்றார்.