Published:Updated:

பட்டாசுக்குத் தடை... ஆனாலும் டெல்லி காற்று மாசுக்குக் காரணம் என்ன? #DelhiSmog

பட்டாசுக்குத் தடை... ஆனாலும் டெல்லி காற்று மாசுக்குக் காரணம் என்ன? #DelhiSmog
பட்டாசுக்குத் தடை... ஆனாலும் டெல்லி காற்று மாசுக்குக் காரணம் என்ன? #DelhiSmog

டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் அதிவேக எட்டு வழிச்சாலையில் (யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவே) 120 கி.மீ வேகத்தில் வாகன ஓட்டிகள் செல்வது சர்வசாதாரணம். அதேபோல பனி மூட்டம் / புகைமூட்டம் இருக்கும்போது இந்தச் சாலையில் விபத்துகள் ஏற்படுவதும் சர்வசாதாரணம். கடந்த 2016-ம் ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்ட விபத்துகள் நிறையவே நடந்துள்ளன. அந்த வகையில், ‘டெல்லி யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் 18 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து' என்றபடி தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ அனைவரையும் உறையவைத்துள்ளது.

பட்டாசுக்குத் தடை... ஆனாலும் டெல்லி காற்று மாசுக்குக் காரணம் என்ன? #DelhiSmog

வெளிநாடுகளில் நடப்பது மாதிரி கார், வேன், பஸ் என்று ஒன்றன்பின் ஒன்றாக பதினெட்டு வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்; பலர் காயமடைந்துள்ளனர். உயிர்தப்பிய பயணிகள் சாமர்த்தியமாக உதவிக்கு வந்ததால் விபத்து மேலும் தொடராமல் தடுக்கப்பட்டது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்படைந்தது. அதேசாலையில் இன்று மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன என்கிறார்கள். தற்போது அந்த வீடியோ செம வைரலாகிக்கொண்டுள்ளது. புகைமூட்டம் கடுமையாக இருப்பதும், இதன் காரணமாக ஆங்காங்கே சிறுசிறு விபத்துகள் நடப்பதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

பட்டாசுக்குத் தடை... ஆனாலும் டெல்லி காற்று மாசுக்குக் காரணம் என்ன? #DelhiSmog

டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நச்சுப்புகை அதிகரித்து வருகிறது. அரியானா, பஞ்சாப், உ.பி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அக்டோபர் மாதத்தில் விவசாய அறுவடை முடிந்தவுடன், கடுகு, பயறு வகைச் செடிகளை எரித்து அழிப்பது வழக்கமான நடைமுறை. அந்தப் புகை அப்படியே டெல்லிப்பக்கம் வந்துவிடுகிறது. அதோடு டெல்லியின் கணக்கற்ற வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளின் புகை என எல்லாமும் சேர்ந்துகொள்ள இந்த நச்சுப்புகை மண்டலம் உருவாகிவிடுகிறது. இதனைக் கருத்தில் கொண்டுதான் இந்த ஆண்டு டெல்லியில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், டெல்லிக்கு வெளியே பட்டாசுக் கடைகள் அதிக அளவில் திறக்கப்பட, அங்கே சென்று வாங்கிவந்த டெல்லிவாசிகள், வழக்கம்போல வெடித்துத் தீர்த்தனர். 

இந்த ஆண்டு இந்த நச்சுப்புகையின் அளவு, நவம்பர் 8 செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 440 முதல் 500 வரை பதிவாகியுள்ளது. "நாள் ஒன்றுக்கு ஒரு நபர் 50 சிகரெட்டுகள் புகைத்துத்தள்ளும் அளவுக்கான நச்சு, டெல்லியில் ஒவ்வொருவரின் நுரையீரலுக்குள்ளும் செல்கிறது" என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, "முடிந்தவரை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்" என்பது மருத்துவர்களின் அறிவுரை. வெளியில் சுற்ற வேண்டிய கட்டாயத்துடன்கூடிய வேலைகளில் உள்ளவர்கள் கண்டிப்பாகத் தரமான மாஸ்க் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

பட்டாசுக்குத் தடை... ஆனாலும் டெல்லி காற்று மாசுக்குக் காரணம் என்ன? #DelhiSmog

இதையடுத்து, திங்கள் கிழமையன்று டெல்லியில் ஆரம்பப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அடுத்த நாளிலிருந்து அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சனிக்கிழமை வரைக்குமானது. மழை பெய்தால் மட்டுமே நச்சு குறைய வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, விமானம் மூலம் தண்ணீரைத் தெளிக்க வாய்ப்பு உள்ளதா என்று அரசு ஆலோசனை நடத்திவருகிறது.