Published:Updated:

'ஆல் இன் ஆல்’ அம்மா நகர் !

டி.அருள் எழிலன், கார்க்கிபவா படங்கள்: வீ.நாகமணி, ஜெ.வேங்கடராஜ், ஆ.முத்துக்குமார், தி.குமரகுருபரன்

ரசு நிர்வாகம், பொதுமக்களுக்கு பெரும்பாலும் முதுகையும் சில சமயங்களில் முகத்தையும் காட்டும். அப்படி நீண்ட காலமாக அரசு இயந்திரத்தின் முதுகை மட்டுமே பார்த்து வாழ்ந்துவந்த ஆர்.கே நகர் தொகுதி மக்கள், இப்போது அதன் பூரிப்பான முகத்தைப் பார்க்கிறார்கள். காரணம்... இடைத்தேர்தலில் 'முதலமைச்சர் ஜெயலலிதா’ போட்டியிடுகிறார்! 

மாமாங்கமாக படுகுழி, பள்ளம் - மேடான சாலைகளையே பார்த்துவந்த தொகுதி மக்களுக்கு, வேட்புமனுத் தாக்கலுக்கு ஜெயலலிதா வருகை காரணமாக, சடுதியில் தண்டையார்பேட்டை தகதகத்தது... குபீர் ஆச்சர்யம். ஜெயலலிதா, காரில் வந்து இறங்கியபோது ஓ.பன்னீர்செல்வம்,  வளர்மதி உள்ளிட்ட அமைச்சர்கள் குழாம் வேகாத வெயிலில் ஓட்டமும் நடையுமாக ஓடிவந்து சேர்ந்துகொண்டனர். கையோடு கொண்டுவந்த இருக்கையில் அமர்ந்து வேட்புமனுத் தாக்கலை செய்து முடித்த ஜெயலலிதா, அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் அங்கு இருந்திருப்பார். ஆனால், அதற்கு முன்பு ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தம், கெடுபிடி, பாதுகாப்பு முன்னேற்பாடுகள், பச்சை வண்ணம் பூசிய அரசுக் கட்டடங்கள்... என ஏரியாவே கிடுகிடுத்தது.

தண்டையார்பேட்டை அகஸ்தியா தியேட்டரைத் தாண்டி மெயின் ரோட்டில் இருந்து ஒரு சந்துக்குள் நுழைந்தால், தேர்தல் பணிமனையில் பிரியாணி விநியோகம் பரபரத்தது. அதைப் படம்பிடித்த நம் புகைப்படக்காரரை ஓரமாகத் தள்ளிச்சென்ற ஒரு 'ரத்தத்தின் ரத்தம்’, ''இதெல்லாம் போட்டோ புடிக்காத தம்பி... எல்லாரும் ஏற்கெனவே டென்ஷனா இருக்காங்க. எதிர்ல போட்டி இல்லேங்கவும் ஓட்டுக்கு 50, 100-தான் கொடுப்பாங்கபோல. அதான் அந்த டென்ஷன்!'' எனப் புலம்பினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
   'ஆல் இன் ஆல்’ அம்மா நகர் !

இரண்டு பைக்குகள் சென்றால்கூட உரசிக்கொள்ளும் சந்துகளில் தண்ணீர் லாரிகள் விரட்டியடித்துச் செல்கின்றன. ஆர்.கே நகரின் பிரதானப் பிரச்னை தண்ணீர்தான்.

''நான் 1966-ல பர்மாவுல இருந்து வந்து இங்கே செட்டில் ஆனேன். அப்போ தண்ணி பிரச்னையே இல்லை. இப்போ 10 வருஷமாத்தான் நிலைமை மாறிப்போச்சு. அதுக்கு முக்கியக் காரணம் கார்ப்பரேஷன் குழாய் தண்ணியில சாக்கடை கலந்ததுதான். இப்போதைக்கு இந்தப் பிரச்னையை யார் வந்தாலும் சரிபண்ண முடியாது. ஆனாலும், ஏதோ ஒரு நம்பிக்கையில ஓட்டு போடுறோம்'' என்றார் ஏரியாவாசி அம்புஜம்.

ஆளும் கட்சியின் அத்தனை அமளிதுமளிகளுக்கு நடுவே...

'ஊருக்கு ரெண்டு கட

பேருக்கு ரேஷன் கட

கேட்ட பொருள் கிடைக்காது

கேவலப்பட்ட கட

அக்கம்பக்கம் பார்த்து நட

கண் சிமிட்டிக் கூப்பிடுது

சர்க்காரு மதுபானக் கட’ எனப் பாடிக்கொண்டு முன்னேறுகிறது கம்யூனிஸ்ட் குழு. ஆர்.கே நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து கம்யூனிஸ்ட்களின் வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கிறார் சி.மகேந்திரன்.

வீட்டில் இருந்து பிரசாரத்துக்கு சி.மகேந்திரன் கிளம்பும்போது, 'ஏங்க இது போதுமா பாருங்க?’ என டிபன் பாக்ஸில் அடைத்த தயிர் சாதத்தைக் காட்டுகிறார் அவருடைய மனைவி. தலை அசைத்து டிபன் பாக்ஸை வாங்கி, பையில் வைத்துக்கொண்டு கிளம்புகிறார் சி.மகேந்திரன். அவருடன் பிரசாரத்துக்கு உடன் வரும் தோழர்களுக்கும் கட்டுச்சோறுதான். நம்பிக்கையை மட்டுமே பலமாகக்கொண்டிருக்கிறார் சி.மகேந்திரன் என்பது, அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது!

   'ஆல் இன் ஆல்’ அம்மா நகர் !

''ஜெயலலிதா ஆதரவு அலையை மீற, என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?''

''என் தந்தை சிங்காரம், பிழைப்பு தேடி சிங்கப்பூர் சென்று, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து அவரது மெய்க்காப்பாளராக இருந்தவர். அப்பா இறந்தபோது, அம்மா வேதம்பாளுக்கு 29 வயது. ஒற்றை மனுஷியாக அவர்தான் என்னைப் படிக்கவைத்தார். இந்தச் சூழலில் இருந்து வந்த கிராமத்தின் முதல் பட்டதாரி நான். வாழ்க்கை முழுக்கவே போராட்டம்தான். அந்த அனுபவத்தை ஆர்.கே நகரிலும் விதைப்போம்.''

''தொகுதி நிலவரம் எப்படி இருக்கிறது?''

''உழைப்பாளர்கள் நிரம்பிய தொகுதி இது. அதனால் மக்களுக்கு எங்கள் மீது மரியாதையும் அன்பும் நிறைந்திருக்கின்றன. உலகத்தின் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி யடைந்தபோது அதை, 'நாடு கடத்தப்பட்டவர் களின் கட்சி’ என்றார்கள். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் வெளியேற்றப்பட்டவர்களால் தொடங்கப்பட்ட கட்சி என்பதால், அந்தக் கிண்டல். அப்படிப்பட்ட கட்சியில் இருந்து வந்த நான், ஆர்.கே நகரில் அலுவலகம் இல்லாதவனாக நிற்கிறேன். அகில இந்தியக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக நிற்கும் எனக்கு, தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அலுவலகம் இல்லை என்பதே தொகுதி நிலவரம்.''

''ஒரு சின்ன அலுவலகம்கூடத் திறக்க முடியவில்லையா?''

''ஆம். மொத்த ஆர்.கே நகரையும் அ.தி.மு.க-வினரே ஆக்கிரமித்து, சந்து பொந்துகளில்கூட அலுவலகம் திறந்திருக்கிறார்கள். அதோடு எங்களுக்கு இடம் தந்தால் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், இடம் தர மக்கள் பயப்படுகிறார்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இங்கு தேர்தல் நடப்பது போன்ற தோற்றம் இருந்தாலும், உண்மையில் நடப்பது தேர்தலே அல்ல. மூலை முடுக்குகூட அ.தி.மு.க-வினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. நாங்கள் வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களுக்கு அவர்களும் வந்து குழுமி நின்று, எங்களை முன்னேறவிடாமல் தடுக்கிறார்கள். ஆனாலும் நாங்கள் சளைக்கவில்லை. அடித்தட்டு மக்கள் வாழும் ஆர்.கே நகரில் எங்கள் கட்சிக்கு வலுவான ஆதரவு இருக்கிறது. விரைவில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தோழர் நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோர் எனக்காகப் பிரசாரம் செய்ய வரவிருக்கிறார்கள்.''

   'ஆல் இன் ஆல்’ அம்மா நகர் !

''கழகங்கள், பணநாயகக் கலாசாரத்துக்கு வாக்காளர்களைப் பழக்கிவைத்திருக்கின்றனவே?''

   'ஆல் இன் ஆல்’ அம்மா நகர் !

(சிரிக்கிறார்) ''பொதுமக்கள் எங்களிடம் அப்படி எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், 'நாம் இவர்களுக்கு வாக்களித்தால், இவர்கள் வெற்றிபெறுவார்களா?’ என்ற சந்தேகமும் அவர்களிடம் இருக்கிறது. இந்தச் சந்தேகத்தை அ.தி.மு.க-வினர் அறுவடை செய்கிறார்கள். அதனால் நாங்கள் வெற்றி-தோல்வி பற்றி கவலைப்படாமல், படித்த இளைஞர்களிடம் அவர்களின் உரிமைகளை உணர்த்துகிறோம். அவர்களின் அவல வாழ்வுக்கு யார் காரணம் என்ற கேள்வியை எழுப்புகிறோம். ஜனநாயகச் சீரழிவுகளைச் சரிசெய்ய, இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாகக் கருதுகிறோம். ஜனநாயகத்தை பணநாயகமாக நடைமுறைப்படுத்தும் போக்குக்கு முட்டுக்கட்டை போடும் ஒரு தொடக்கப்புள்ளியாக இந்தத் தேர்தல் இருக்கும் என்பதே எங்களுக்கு வெற்றிதான்.''

''பொதுமக்களிடம் நன்மதிப்பைப் பெற்ற டிராஃபிக் ராமசாமிக்கு ஏன் நீங்கள் ஆதரவு அளிக்கவில்லை?''

''ஊழலுக்கு எதிரான தனிப்பட்ட உணர்வுதான் அவரது அரசியல். பரந்துபட்ட சமூகப் பார்வையோ, மக்கள் சமூகத்தின் பலவிதமான ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல் அமைப்பு, கல்வி உரிமை, வாழ்வுரிமை போன்ற அரசியல் பார்வைகளோ, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான தொலைநோக்குத் திட்டங்களோ அவரிடம் இல்லை. ஊழல் ஒரு மிகப் பெரிய பிரச்னைதான் என்றாலும், சில 100 ரூபாய்

லஞ்சப் பிரச்னைகளை உயர் நீதிமன்றம் வரை கொண்டுசென்று, அது மட்டுமே மக்கள் பிரச்னை என்பதுபோல அவர் பேசுவது, அனைத்துப் பிரச்னைகளுக்குமான தீர்வு ஆகாது!''