Election bannerElection banner
Published:Updated:

''கிறிஸ்தவ மதத்துக்கு மாறவில்லை!''- வைகோ மறுப்பு

''கிறிஸ்தவ மதத்துக்கு மாறவில்லை!''- வைகோ மறுப்பு
''கிறிஸ்தவ மதத்துக்கு மாறவில்லை!''- வைகோ மறுப்பு

''கிறிஸ்தவ மதத்துக்கு மாறவில்லை!''- வைகோ மறுப்பு

'கிறிஸ்தவ மதத்துக்கு மாறவில்லை' என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மறுப்பு தெரிவித்துள்ளார். 

வைகோ, கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடியைச் சேர்ந்த மத போதகர் மோகன் சி.லாசரஸ், பிரசங்கத்தின்போது கூறியதாக ஒரு வீடியோ,  இணையத்தில் சுற்றிவருகிறது. அதில், அரசியல் கட்சித் தலைவர் வைகோ, குடும்பத்துடன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாகவும் ஞானஸ்தானம் எடுத்துவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், வைகோ தினமும் பைபிள் படிப்பதாகவும் அரசியல் கட்சித் தலைவராக இருப்பதால் அவர் வெளிப்படையாக மதம் மாறியதை அறிவிக்கவில்லை. வைகோ-வின் மகளும் மருமகனும்கூட அமெரிக்காவில் தேவ ஊழியத்தில் ஈடுபட்டுவருவதாகவும் மோகன் சி.லாசரஸ் தெரிவித்திருந்தார். 

தற்போது, வைகோ இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து வைகோ கூறியிருப்பதாவது, '' என்னுடைய சகோதரி கிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கைகொண்டவர். மகள், மருமகன் கிறிஸ்தவ மதத்தில்தான் இருக்கிறார்கள். நான் கிறிஸ்தவ மதத்தில் சேரவில்லை.  மனித வாழ்வை நெறிப்படுத்தும் அத்தனை மதப்புத்தகங்களையும் படிப்பேன். தேவாரம், திருவாசகம், பைபிள், திருக்குர்ஆன் போன்றவற்றைப் படிப்பதை வழக்கமாகக்கொண்டவன். அதில், சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை என் உரையில் மேற்கோள்காட்டிப் பேசுவது வழக்கம். 

என் முன்னோர்கள் கட்டியுள்ள சுந்தரராஜப் பெருமாள், ஈஸ்வரன் கோயில்களை இப்போதும் எங்கள் குடும்பத்தினர்தான் பராமரிக்கிறோம். கலிங்கப்பட்டி விநாயகர் கோயிலுக்கு கோபுரம் அமைத்துக்கொடுத்துள்ளோம். தாயார் இருந்தவரை, கலிங்கப்பட்டி வீட்டில் இந்துக் கடவுள்களின் படங்களுக்கு பூஜைசெய்து, என் நெற்றியில் திருநீர் இடுவார். இப்போது, மருமகள் பூஜைசெய்கிறார். என்னுடைய மனைவி, கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்றுவருவார். எந்த மதத்தையும் வழிபாட்டையும் விமர்சித்தோ, புண்படுத்தியோ நான் பேசியதே கிடையாது.  நான் கிறிஸ்தவ மதத்தில் சேரவும் இல்லை. திருக்குறளைப் படிப்பதுபோல, பைபிள், திருக்குரானையும் படிக்கிறேன்'' என விளக்கமளித்துள்ளார். 
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு