Published:Updated:

மழை நீடிக்கும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மழை நீடிக்கும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மழை நீடிக்கும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மழை நீடிக்கும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. பரவலாகப் பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியான மனநிலையில் உள்ளனர். இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடந்த இரு தினங்கள் மழை சற்று ஓய்ந்தது. 

இந்நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மழை  மீண்டும் தொடங்கி உள்ளது. இன்று காலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.  அப்போது, “வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரிமாவட்டம் தக்கலையில் 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மைலாடியில் 4 சென்டி மீட்டர் மழையும், அம்பாசமுத்திரத்தில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது” என்றார். எனினும்  ஒட்டு மொத்தமாக தமிழகத்தி்ல் இதுவரை  வழக்கமான அளவை விடவும் மழை 6 சதவிகிதம் குறைந்து 24 சதவிகித மழையே பெய்துள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார். 

அடுத்த கட்டுரைக்கு