Published:Updated:

மத்திய அரசுக்கு ஆதரவை தொடருவது குறித்து மாயாவதி நாளை முடிவு!

மத்திய அரசுக்கு ஆதரவை தொடருவது குறித்து மாயாவதி நாளை முடிவு!
மத்திய அரசுக்கு ஆதரவை தொடருவது குறித்து மாயாவதி நாளை முடிவு!
மத்திய அரசுக்கு ஆதரவை தொடருவது குறித்து மாயாவதி நாளை முடிவு!

லக்னோ: மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தொடருவதா அல்லது வேண்டாமா  என்பது குறித்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி நாளை முடிவெடுக்க உள்ளதால் டெல்லி  அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் பேரணி  நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் மாயாவதி, "நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்பதை தற்போதுள்ள நிலைமை  உணர்த்துகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்புக்கு வந்தது  முதல்,அதன் பொருளாதார கொள்கைகளால் சாதாரண மனிதனின் சிரமங்கள் மட்டும்தான்  அதிகரித்துள்ளது. அரசின் முடிவுகள் அனைத்தும் மக்களுக்கு எதிராகவே உள்ளன.
 
எனவே,ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதா? வேண்டாமா?  என்பது பற்றி நாளை நடைபெற உள்ள தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவு  எடுக்கப்படும்.
 

##~~##
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு மக்களுக்கு தீங்கு விளைவிக்கும்.எனவே  அதனை நாங்கள் ஆதரிக்கமாட்டோம்.ஆனால், விவசாயிகள் மற்றும் ஏழை மக்கள்  முன்னேற்றத்திற்கு உதவினால் அன்னிய முதலீட்டை வரவேற்போம்.
 
உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி மறைமுகமாக சமாஜ்வாதி  கட்சியுடன் இணைந்து செயல்பட்டு எங்களை தோற்கடித்துவிட்டது.எனவே காங்கிரஸ்  மற்றும் சமாஜ்வாதி, பா.ஜனதா ஆகிய கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம்”  என்றார்.