Published:Updated:

முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு பதவி இல்லை: மு.க.ஸ்டாலின்

முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு பதவி இல்லை: மு.க.ஸ்டாலின்
முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு பதவி இல்லை: மு.க.ஸ்டாலின்
முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு பதவி இல்லை: மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக இளைஞர் அணியில் முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு பதவி  இல்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞர் அணி பொறுப்பாளர்களை தேர்வு செய்யும் பணி 10 மாதங்களுக்கு  முன்பு தொடங்கியது.இளைஞர் அணி செயலாளர் மு.க. ஸ்டாலின் அனைத்து  மாவட்டங்களுக்கு சென்று, சுமார் ஒரு லட்சம் பேர்களிடம் நேர்காணல் நடத்தினார்.  அவர்களில் இருந்து 5033 பேர் பொறுப்பாளர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

இளைஞர் அணியின் பொறுப்பாளர்கள் தேர்வு முழுக்க முழுக்க தகுதி மற்றும் வயதின்  அடிப்படையில் மட்டுமே நடைபெற்றதாகவும்,கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட  செயலாளர்களின் சிபாரிசுகளை மு.க. ஸ்டாலின் நிராகரித்ததாகவும், திறமைக்கும்,  உழைப்புக்கும் முக்கியத்துவம் அளித்து நிர்வாகிகளை தேர்வு செய்ததாகவும்,வயது வரம்பு  விஷயத்திலும் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றும் ஸ்டாலினுக்கு  நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

மேலும் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், கே.பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  ஐ.பெரியசாமி, கருப்பசாமிபாண்டியன் போன்ற மாவட்டச் செயலாளர்கள், முன்னாள்  அமைச்சர் எஸ்.பி. சற்குணபாண்டியன் ஆகியோரின் மகன்களுக்கு இளைஞர் அணியில்  பொறுப்புகள் வழங்கப்பட வில்லை.இந்த மாவட்டங்களில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு  அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இளைஞர் அணி பொறுப்பாளர்களை தேர்வு செய்த முறைபற்றி மு.க.  ஸ்டாலின் கூறுகையில்,"இளைஞர் அணி தேர்வில் நான் புதிய பார்முலாவை  கடைப்பிடித்தேன்.தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, முறையாக  பின்பற்றப்பட்டன.இந்த வழிகாட்டு நெறிகளை உணர்ந்து கொண்ட மூத்த தலைவர்கள்  பலரின் வாரிசுகள் இளைஞர் அணி நிர்வாகி போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

நேர்காணலில் கலந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே சிலர் வந்தனர்.என்னை நேரில்  சந்திக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நேர்காணலில் பங்கேற்றதாக சிலர் என்னிடம்  கூறினர்.எனது பார்முலாவை மாவட்டச் செயலாளர்கள் சந்தோஷமாக ஏற்றுக்  கொண்டனர்.

கட்சியில் மூத்த தலைவர்களின் மகன்களும்,கட்சியின் மற்ற அணிகளில் சிறப்பாக  செயல்படலாம். ஆனால் திமுகவின் முக்கிய அமைப்பாக இளைஞர் அணி இருப்பதால்  வழி காட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் கடைப்பிடிக்க விரும்பினேன்.அதன் அடிப்  படையில்தான் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

##~~##
நேர்காணலின் போது சிலர் தனக்கு 40 வயது முடிந்து ஓரிரு நாட்கள் அல்லது சில  வாரங்கள் மட்டுமே ஆகின்றன.எனவே, எனது வேட்புமனுவை ஏற்க வேண்டும் என்று  கூறினர்.அதற்காக விதிமுறைகளை மாற்ற முடியாது என்று அவர்களிடம் உறுதியாக  கூறிவிட்டேன்.
நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் சிலரின் பிறப்பு சான்றிதழில் சந்தேகம்  எழுந்தபோது,ஒன்றுக்கு மேற்பட்ட முறை அந்த சான்றிதழ் சோதித்து பார்க்கப்பட்டது.  இளைஞர் அணியில் 1980களில் என்னுடன் பணியாற்றிவர்களின் வாரிசுகளும்  நேர்காணலில் பங்கேற்றனர்.அந்த வாரிசுகள் சிறுவர்களாக இருந்தபோது என்னுடன்  சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்பட ஆல்பத்தையும் கையோடு கொண்டு வந்து என்னிடம்  காட்டினர்.
அவர்களுக்கு எதிராக முடிவு எடுப்பது எனக்கு சிரமமாக இருந்தது.ஆனால், எனக்கு  வேறு வழி இல்லை.புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள அமைப்பாளர்கள் மற்றும் துணை  அமைப்பாளர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திமுகவின் மாநில  மாநாட்டுக்கு பிறகு இந்த கூட்டம் நடைபெறும்”என்றார்.