Published:Updated:

வீரபாண்டி ஆறுமுகம் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து!

வீரபாண்டி ஆறுமுகம் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து!
வீரபாண்டி ஆறுமுகம் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து!
வீரபாண்டி ஆறுமுகம் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து!

சென்னை: வீரபாண்டி ஆறுமுகம் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து!

சென்னை:திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் தம்மை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

##~~##
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வீரபாண்டி ஆறுமுகம் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது செல்லாது என்று கூறி,அவரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிட்டது.
மேலும் இதே வழக்கில் கைது செய்யப்பட்ட பாறைப்பட்டி சுரேஷ் மற்றும் கௌசிக பூபதி ஆகியோர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தையும் ரத்து செய்து, அவர்களையும் உடனே விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.