Published:Updated:

ஆக்கிரமிப்பு புகார்: முன்னாள் அமைச்சர் நேரு தம்பியின் அரிசி ஆலை இடிப்பு!

ஆக்கிரமிப்பு புகார்: முன்னாள் அமைச்சர் நேரு தம்பியின் அரிசி ஆலை இடிப்பு!
ஆக்கிரமிப்பு புகார்: முன்னாள் அமைச்சர் நேரு தம்பியின் அரிசி ஆலை இடிப்பு!
ஆக்கிரமிப்பு புகார்: முன்னாள் அமைச்சர் நேரு தம்பியின் அரிசி ஆலை இடிப்பு!

லால்குடி: திருச்சி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியதாக திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பிக்கு சொந்தமான அரிசி ஆலை இடிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி மணிவண்ணனுக்கு சொந்தமான நவீன அரிசி ஆலை திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூரில் உள்ளது.

இந்த அரிசி ஆலையை சீனிவாசன் என்பவரிடம் இருந்து மணிவண்ணன் கடந்த 2009-ம் ஆண்டு வாங்கி விரிவு படுத்தி `ஸ்ரீநாராயண ரெட்டியார் நவீன அரிசி ஆலை' என்ற பெயரில் 2010-ம் ஆண்டு தொடங்கி இருக்கிறார். இந்த அரிசி ஆலையின் முன்பகுதியில் பங்குனி வாய்க்கால் என்ற பாசன வாய்க்கால் உள்ளது.

வாய்க்கால் ஆக்கிரமிப்பு


பங்குனி வாய்க்காலுக்கும் மணிவண்ணனின் நவீன அரிசி ஆலைக்கும் இடைப்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 13 ஆயிரம் சதுர அடி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மதில் சுவர் எழுப்பி அதில் அரிசி ஆலைக்கு தேவையான கட்டிடங்கள் கட்டியதாகவும், விதிமுறைகளை மீறி பங்குனி வாய்க்காலுக்குள் பில்லர்கள் எழுப்பி பாலம் கட்டியதாகவும் அரசு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இந்நிலையில் லால்குடி ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் மணிவண்ணனுக்கு சொந்தமான அரிசி ஆலைக்கு வந்தனர். பாதுகாப்புக்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசாரும் அரிசி ஆலையை சுற்றி குவித்து வைக்கப்பட்டு இருந்தனர். தீயணைப்பு வாகனங்கள். கலவர நேரங்களில் பயன்படுத்தப்படும் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்

வாய்க்கால் மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து இந்த அரிசி ஆலை கட்டப்பட்டு இருக்கிறது. எனவே ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கப்போவதாக கூறி அதிகாரிகள் உள்ளே சென்றனர். இதற்கு மணிவண்ணனின் வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முறைப்படி அனுமதி பெறப்பட்டு தான் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. ஏன் எங்களுக்கு முன்கூட்டியே நோட்டீசு கொடுக்காமல் திடீர் என வந்து இடிக்க போவதாக கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்கள். அவர்களது கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர். இதனால் அதிகாரிகளுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

##~~##
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அரிசி ஆலைக்குள் சென்று ஆக்கிரமிப்பு பகுதிகளை நில அளவை துறை ஊழியர்கள் மூலம் அளந்தனர். இந்த பணிகள் நடந்த போது அரிசி ஆலைக்கு வெளியே நின்று கொண்டிருந்த திமுக பிரமுகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் போட்டனர். சிலர் அதிகாரிகளை முற்றுகையிடுவது போல் வந்தனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நில அளவை துறை சர்வேயர்கள் ஆக்கிரமிப்பு இடங்களை அளந்து குறியீடு செய்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து அதில் இருந்த கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. முதலில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த மதில்சுவர் இடிக்கப்பட்டது. மதில் சுவரை இடித்த போது சிலர் பொக்லைன் எந்திரம் முன்வந்து தகராறு செய்தனர். இதனால் பொக்லின் டிரைவர் சாவியை எடுத்துக்கொண்டு ஓடி விட்டார். அதன் பின்னர் வேறு டிரைவர் மூலம் தொடர்ந்து 3 குடோன்களை இடிக்கும் பணி தொடங்கியது. இந்த குடோன்களில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. ஒரு குடானில் இயந்திரங்கள் இருந்தன. நெல் மூட்டைகளை அரிசி ஆலை ஊழியர்கள் வேறு இடத்திற்கு எடுத்து செல்வதற்காக லாரிகளில் ஏற்றினார்கள். பொக்லைன் எந்திரங்கள், புல்டோசர்கள் மூலம் 3 கட்டிடங்களும் இடித்து தள்ளப்பட்டன.