Published:Updated:

பணிக்கு தாமதமாக வரும் டாக்டருக்கு சம்பளத்தில் பிடித்தம்: அமைச்சர் எச்சரிக்கை

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணிக்கு தாமதமாக வரும் டாக்டர்களின்   சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜய்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர், பேராசிரியர்,  நர்ஸ்கள் வருகை பதிவு செய்வதற்கு 5 பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

##~~##
இதை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.அப்போது  பேசிய அவர்,"பயோ மெட்ரிக் கருவி, டாக்டர், ஊழியர், நர்ஸ்களை பயமுறுத்தவோ,  பழி வாங்கவோ பொருத்தவில்லை.சில டாக்டர்கள் தாமதமாக வருகின்றனர். இதனால்,  சிகிச்சை பாதிக்கப்படுகிறது என மக்கள் புகார் கூறுகின்றனர்.ஆனால், பல டாக்டர்கள்  காலை 7 மணிக்கே வந்து இரவு வரை கூடுதல் நேரம் பணி செய்கின்றனர்.ஒழுங்காக  வரும் டாக்டர்,ஊழியர்களை அரசு ஊக்குவிக்கும்.
பயோ மெட்ரிக் கருவியில் பதிவான விவரங்கள் அனைத்தும் சம்பள பட்டியலில்  இணைக்கப்படும். இதனால் தாமதமாக வரும் டாக்டர்,ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம்  செய்யப்படும்” என்றார்.