Published:Updated:

பொதுக் கழிப்பிடங்களை அமைக்க ரூ. 72 கோடி ஒதுக்கீடு!

பொதுக் கழிப்பிடங்களை அமைக்க ரூ. 72 கோடி ஒதுக்கீடு!
பொதுக் கழிப்பிடங்களை அமைக்க ரூ. 72 கோடி ஒதுக்கீடு!
பொதுக் கழிப்பிடங்களை அமைக்க ரூ. 72 கோடி ஒதுக்கீடு!

சென்னை: தமிழகத்தில் பொதுக்கழிப்பிடங்களை அமைக்க 72 கோடியே 60 லட்சம்  ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நகர்ப்பகுதிகளில்  அடிப்படை வசதிகளான குடிநீர்,கழிவு நீர் அகற்றல்,சுகாதாரம்,மழைநீர் வடிகால், சாலைகள்,தெருக்கள்,  திடக் கழிவு மேலாண்மை மற்றும் வாகன  நிறுத்துமிடம்,பேருந்து நிலையம்,பூங்காக்கள் போன்ற அனைத்து அடிப்படை  வசதிகளையும் ஏற்படுத்த உத்திரவிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, இதற்கென  நிதியினை ஒவ்வொரு ஆண்டும் விடுவித்து வருகிறார்.

இதன் அடிப்படையில்,பல்வேறு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு,அதாவது 2012-13 ஆம் ஆண்டிலும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித்  திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்திட,சென்னை தவிர பிற மாநகராட்சிகள்  மற்றும் நகராட்சிகளுக்கு 500 கோடி ரூபாயும்,பேரூராட்சிகளுக்கு 250 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து
முதலமைச்சர் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.

##~~##
இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து உள்கட்டமைப்பு பணிகளும்  குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும்,  நிர்வாக அமைப்பினை முறைப்படுத்தி வலுப்படுத்தும் வகையிலும்,நகர்ப்புற உள்ளாட்சி  அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மாண்புமிகு முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில்,பேரூராட்சிகளில் காலியாக உள்ள 1,286 பணியிடங்களை  உடனடியாக நிரப்புவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
2015-ஆம் ஆண்டிற்குள்,தமிழ்நாட்டில் பொது இடங்களில் மலம் கழிப்பதை முற்றிலும்  ஒழிக்க முதலமைச்சர் ஜெயலலிதாதலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது.இதனைக்
கருத்தில் கொண்டு,புதிய பொதுக் கழிப்பிடங்கள் அமைக்கவும்,தற்பொழுதுள்ள  கழிப்பிடங்களுக்கு தண்ணீர் வசதி மற்றும் மின்சார வசதி ஆகிய பணிகளுக்காக கடந்த  2011-12 ஆம் ஆண்டு ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு,முதற்கட்டமாக 19.83 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,இத்திட்டம் துவக்கப்பட்டது.
இதன் மூலம் 52 பேரூராட்சிகளில்52 ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள்  கட்டப்பட்டதுடன் 62 பேரூராட்சிகளில் உள்ள 75 சுகாதார வளாகங்கள்  புனரமைக்கப்பட்டன.அதேபோல் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள
658 கழிவறைகள் புனரமைக்கப்பட்டதுடன் மற்றும் புதியதாக 253 கழிவறைகள்  கட்டப்பட்டுள்ளன.
மேலும்,இந்த ஆண்டு,அதாவது 2012-13 ஆம் ஆண்டு மாநகராட்சி, நகராட்சி மற்றும்
பேரூராட்சிகளில் பொது கழிப்பிடங்களை மேம்பாடு செய்யவும் மற்றும் புதிய பொது  கழிப்பிடங்களை கட்டுவதற்கும்,அரசு மானியமாக 36 கோடியே 30 லட்சம் ரூபாயும்,  ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 18 கோடியே 15 லட்சம் ரூபாயும்,  அடிப்படை கட்டமைப்பு நிதியை ஈடு செய்வதற்கான பங்களிப்புத் தொகையின் கீழ் 18 கோடியே 15 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 72 கோடியே 60 லட்சம் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்”என  தெரிவிக்கப்பட்டுள்ளது.