Published:Updated:

மிலாடி நபி திருநாள் : ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி, பிப்ரவரி 15, 2011

நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபி திருநாளை முன்னிட்டு பிரதமர், குடியரசுத் தலைவரும், குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது  தொடர்பாக குடியரசுத் தலைவர் திருமதி தேவிசிங் பாட்டீல் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "முகமது நபிகள் நாயகம் போதித்த சகோதரத்துவம், கருணை, சகிப்புத் தன்மை மற்றும் மனித குலத்திற்கு சேவை ஆகிய நன்னெறிகள் நம்மை நல்லிணக்க பாதையை பின்பற்றச் செய்து அனைவருடைய நலனுக்காக உழைப்பதற்கு வழிகாட்டியாகவும், உந்து சக்தியாகவும் அமையட்டும்"என்று தெரிவித்துள்ளார்.

இதே போல குடியரசு துணைத் தலைவர் தஅமீது அன்சாரி வெளியிட்டுள்ள செய்தியில், "நபிகள் நாயகத்தின் போதனைகளான அன்பு, மனித நேயம், நேர்மை, சகிப்புத் தன்மை ஆகியவை மனித குலத்தின் ஆன்மீக பலத்திற்கு ஆதாரமாக விளங்கட்டும். நபிகளின் போதனைகள் நம்மை ஒன்றுபடுத்தி அமைதி மற்றும் நல்லிணக்கப் பாதையில் நமக்கு வழிகாட்டட்டும்"என்று கூறியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், முகமது நபிகளின் பிறப்பும் வாழ்க்கையும் தியாகம், சகோதரத்துவம் மக்களிடையே நல்லிணக்கம், ஆகியவற்றை எடுத்துக் காட்டுவதாகும் என்று கூறியுள்ளார். கருணை மற்றும் சகோதரத்துவமான வாழ்க்கையை மேற்கொள்ள நபிகளின் வாழ்க்கை ஒரு உந்துசக்தியாகும். மிலாதுன் நபி திருநாள், அமைதி, அன்பு மற்றும் சகிப்பத் தன்மையை வளர்க்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.