Published:Updated:

மின் தேவைக்கு அணு சக்திதான் நிரந்தரத் தீர்வு: நாராயணசாமி

மின் தேவைக்கு அணு சக்திதான் நிரந்தரத் தீர்வு: நாராயணசாமி
மின் தேவைக்கு அணு சக்திதான் நிரந்தரத் தீர்வு: நாராயணசாமி
மின் தேவைக்கு அணு சக்திதான் நிரந்தரத் தீர்வு: நாராயணசாமி

புதுடெல்லி: நாட்டின் மின்தேவையைப் பூர்த்தி செய்ய நிலக்கரியும், அணு சக்தியும்தான் நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்று கூறியுள்ள பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை இணை அமைச்சர்  நாராயணசாமி, தன்னிச்சை அதிகாரத்துடன் கூடிய அணுசக்தி ஆணையம் அமைக்கும் மசோதா கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய எரிசக்தி அமைப்பு சார்பில் 'அணுசக்திப் பயன்கள்' என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பேசுகையில் இதனை தெரிவித்த அவர்,"கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபடும் மக்களிடையே நிலவும் சந்தேகங்களைக் களைய மத்திய அரசும் இந்திய தேசிய அணுமின் நிறுவனமும் முயற்சி மேற்கொண்டன.அவர்கள் எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.ஆனால், சில தன்னார்வ அமைப்புகள் அணுமின் திட்டங்கள் தொடர்பாக உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பி வருகின்றன.

இருந்தபோதும், மக்கள் நலன் கருதியும் மின்தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடனும் அங்கு அணுமின் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

அணுமின் திட்டங்கள் தொடர்பாக தமிழக அரசு நியமித்த நிபுணர் குழு ஆய்வு செய்தது.அதன் முடிவில் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என அறிக்கை அளித்தது.அதன் பிறகே அங்கு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. முதலாவது அணுஉலையில் விரைவில் உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

##~~##
நடப்பு நிதியாண்டுக்குள் கூடங்குளத்தில் தொடங்கப்பட்டுள்ள தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் இரு திட்டங்களின் பணிகள் முழுமைபெறும். அதன் பிறகு மின் உற்பத்தி தொடங்கும்.
இந்தியாவில் உள்ள 20 அணுமின் நிலையங்கள் மூலம் தற்போது 4,780 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கூடுதலாக ஏழு புதிய அணுமின் திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. மேற்கண்ட திட்டங்கள் முடிவடைந்தவுடன் 10 ஆயிரத்து 80 மெகா வாட் மின்சாரத்தை அணுசக்தி மூலம் தயாரிக்கும் திறனை 2017-ம் ஆண்டில் இந்தியா பெறும்.

அணு சக்திதான் நிரந்தரத் தீர்வு

நாட்டின் மின்தேவையைப் பூர்த்தி செய்ய நிலக்கரியும், அணுசக்தியும்தான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்.

அதனால், அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும்போது அருகில் உள்ள மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தும்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் தன்னிச்சையான அணுசக்தி ஆணையத்தை உருவாக்கும் வகையிலான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 21-ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்த மசோதாவை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்"என்றார்.