Published:Updated:

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

வந்தவாசி: தமிழகத்தில் நிலவும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வந்தவாசியில் நடந்த ஆலோசனை ஆய்வு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்துள்ள சென்னாவரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆரணி பாராளுமன்ற தொகுதி ஆலோசனை ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அரிசி, பருப்பு, காய்கறி விலை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயாந்து விட்டது. இதனால் மக்கள் வாழ்வதற்கு வழியின்றி தவிக்கின்ற நிலை உருவாகி உள்ளது. சென்னை நகரில் மின் வெட்டு ஒரு மணி நேரத்திலிருந்து 2மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத 16 மணிநேர மின் வெட்டு உள்ளது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என தொடக்கத்திலிருந்தே பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. பா.ம.க.வின் முயற்சியால் கடந்த ஆட்சியில் திருவண்ணாமலையில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதுடன் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இப்பணியை விரைவாக முடித்து வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும். வந்தவாசி அடுத்துள்ள தென்னாங்கூரில் திருவள்ளுவர் பல்கலை கழகத்தின் மூலம் கலை மற்றும் அறிவியியல் கல்லூரி தனியார் கட்டிடத்தில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்கு புதிய கட்டிடங்கள் கட்ட தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகள் தொடங்க படவில்லை.

கட்டிட வசதி இன்மையால் மாணவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இதனை போக்குகின்ற வகையில் கட்டிடங்கள் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.