Published:Updated:

ஆயுதபூஜை, விஜயதசமி: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஆயுதபூஜை, விஜயதசமி: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
ஆயுதபூஜை, விஜயதசமி: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
ஆயுதபூஜை, விஜயதசமி: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

சென்னை: ஆயுதபூஜை, விஜய தசமியை முன்னிட்டு முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
 
நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில் ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமித் திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும், மனத்திட்பத்தோடு துணிவையும் தரும் மலைமகளையும், செல்வங்களை அள்ளித் தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும்.
 
அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாக விஜய தசமி திருநாளை மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.  உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலைத் தெய்வம் என மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி தொழில் சார்ந்த கருவிகளைத் தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாள் ஆகும்.
 
ஊக்கமுடன் கூடிய உழைப்பே, வறுமையை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதை உணர்த்தும் திருநாளாக இந்தப் பண்டிகை விளங்குகிறது.
 
இந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து வளமும், நலமும் ஒருங்கே பெற்று சீரோடும் சிறப்போடும் சிறந்து விளங்கிட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.