Published:Updated:

ஆசிரியராக ஆசைப்பட்டேன் : பிரணாப் முகர்ஜி

ஆசிரியராக ஆசைப்பட்டேன் : பிரணாப் முகர்ஜி
ஆசிரியராக ஆசைப்பட்டேன் : பிரணாப் முகர்ஜி
ஆசிரியராக ஆசைப்பட்டேன் : பிரணாப் முகர்ஜி

ஜகர்நாஹர் : ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிர்நகரில் அவர் படித்த ஷிப் சந்திரா உயர்நிலைப்பள்ளியில்  பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அங்கு பிரணாப் முகர்ஜி மாணவர்களுடன் கலந்துரையாடினார். தான் 5-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை படித்த காலங்களை நினைவு கூர்ந்தார் பிரணாப் முகர்ஜி. அவர் பேசியபோது, எனது தந்தை சுதந்திர போராட்ட வீரராகவும், நேரடி அரசியலிலும் ஈடுபட்டு இருந்தார். அதனால் எனக்கு சின்ன வயதிலிருந்தே அரசியலில் ஆர்வம் இருந்தது. ஆனாலும், நேரடி அரசியலில் ஈடுபடுவதைக் காட்டிலும், ஆசிரியராக பணிபுரியவே விரும்பினேன் என்று கூறினார்.