Published:Updated:

மத்திய அரசிடமும் போதிய அளவு மின்சாரம் இல்லை: மு.க. அழகிரி

மத்திய அரசிடமும்  போதிய அளவு மின்சாரம் இல்லை: மு.க. அழகிரி
மத்திய அரசிடமும் போதிய அளவு மின்சாரம் இல்லை: மு.க. அழகிரி
மத்திய அரசிடமும்  போதிய அளவு மின்சாரம் இல்லை: மு.க. அழகிரி

மதுரை: மத்திய அரசிடமும்  போதிய அளவு மின்சாரம் இல்லை என்று மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரும், தென் மண்டல அமைப்புச் செயலருமான மு.க. அழகிரியை, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கடந்த திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இளைஞரணி புதிய நிர்வாகிகள் சந்திக்க வாய்ப்பு அளிக்குமாறு ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த புதிதாக நியமிக்கப்பட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள், மரியாதை நிமித்தமாக அமைச்சர் அழகிரியை அவரது வீட்டில் நேற்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இதில்,ஸ்டாலின் ஆதரவாளர்களான மதுரை மாநகரச் செயலர் கோ.தளபதி, இளைஞரணிச் செயலர் ஜெயராமன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அழகிரி,"திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலர் என்ற முறையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இளைஞரணி,மாணவரணி, மகளிரணி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றுச் சென்றுள்ளனர்.பதவி கிடைத்தவர்கள் மட்டுமின்றி, பதவி கிடைக்காதவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இளைஞரணி நிர்வாகிகள் நியமனத்தில் எனது பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை. இருப்பினும், பதவி கிடைக்காதவர்கள் என்னைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளனர்.

திமுகவினர் மீது வழக்குப் போடுவதுதான் அதிமுக அரசின் சாதனையாக இருக்கிறது. அதைத் தவிர மக்களுக்கான ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கைகளையும் காண முடியவில்லை.

##~~##
மத்திய அமைச்சர் மற்றும் மதுரை தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்ற முறையில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம், கிரானைட் கற்கள் பாலீஷ் போடும் தொழிற்சாலை,அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்ன நிலையில் இருக்கிறது என்பதே தெரியவில்லை. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை ஒன்றாக இணைத்துவிட்டனர். மதுரை மாநகரப் பகுதியில் 18 நவீன இலவச கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. அவற்றை தற்போது கட்டணக் கழிப்பறைகளாக மாற்றி விட்டனர்.
தமிழகத்தின் மின்பற்றாக்குறையை தீர்க்க பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? நேரடியாக சந்தித்து வலியுறுத்த வேண்டாமா? மத்திய அரசிடமும் போதிய அளவு மின்சாரம் இல்லை. எனவே கூடங்குளம் போன்ற திட்டங்கள் செயல்படும் போது தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் கிடைக்கும் " என்றார்.