Published:Updated:

பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியுடன் கோத்தபாய ராஜபக்ச பேச்சு!

Vikatan Correspondent
பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியுடன் கோத்தபாய ராஜபக்ச பேச்சு!
பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியுடன் கோத்தபாய ராஜபக்ச பேச்சு!
பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியுடன் கோத்தபாய ராஜபக்ச பேச்சு!

புதுடெல்லி: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச,இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் அழைப்பின்பேரில் டெல்லி வந்துள்ள கோத்தபாய,அந்தோணியுடனான சந்திப்பைத் தொடர்ந்து இன்று மத்திய அரசின் மேலும் சில தலைவர்களைச் சந்தித்து பேசவுள்ளார்.

இலங்கை -இந்திய நாடுகளுக்கிடையிலான ராணுவ ஒத்துழைப்புக்களை வலுப்படுத்திக்கொள்வது உட்பட, இரு நாடுகளுக்கிடையிலான ராணுவப் பயிற்சிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உறவுகள் தொடர்ந்து பேணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சர்,கோத்தபாயவுக்கு தெளிவுபடுத்தியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் தமிழக மீனவர் பிரச்னையை தீர்ப்பதற்கான ஒன்றிணைந்த நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

##~~##
இந்நிலையில், இன்று மத்திய அரசின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து தற்போது சர்ச்சைகளை கிளப்பியுள்ள 13 வது திருத்தச்சட்டம் மற்றும் அரசியல் தீர்வு போன்ற விஷயங்கள் தொடர்பாகவும் கோத்தபாய பேசவுள்ளார்.
மேலும் மத்திய அரசின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்புக்களின் போது இலங்கையின் வட - கிழக்குப் பகுதிகளில் காணப்படுகின்ற துறைமுகங்களில் சீனாவின் நடவடிக்கைகள், அதேபோன்று பாகிஸ்தானுடன் தற்போது இலங்கை அரசு கொண்டுள்ள ராணுவப் பயிற்சி மற்றும் ஒத்துழைப்புகள் போன்ற விஷயங்களினால் இந்தியாவின் அதிருப்தியை மீள்நெறிப்படுத்தவும்,இழந்துள்ள செல்வாக்கை மீளப் பெறுவதற்காகவும் கோத்தபாய ராஜபக்ச முயற்சிப்பதுடன்,தமிழகத்தின் எதிர்ப்புகளினால் இரு நாடுகளுக்கடையிலான பாதுகாப்பு உறவுகள் பாதிக்கப்படாதென்ற உத்தரவாதத்தை,இலங்கைக்கு இந்தியா வழங்குமென்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.