Published:Updated:

ஜெயலலிதாவுடன் 2 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து பாராட்டு!

ஜெயலலிதாவுடன் 2 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து பாராட்டு!
ஜெயலலிதாவுடன் 2 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து பாராட்டு!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன் மற்றும்  தமிழ் அழகன் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில்  சந்தித்தனர்.அப்போது,அதிமுக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்ததாக  கூறப்படுகிறது.

ஜெயலலிதாவுடன் 2 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து பாராட்டு!

முதல்வர் ஜெயலலிதாவை, மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன்  மற்றும் திட்டக்குடி தேமுதிக எம்.எல்.ஏ. தமிழ் அழகன் ஆகியோர் தலைமைச்  செயலகத்தில் இன்று காலை சந்தித்துப் பேசினர்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் இருவரும், தங்களது  தொகுதி வளர்ச்சிக்கு உதவும்படி, முதல்வரிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தனர்.

மேலும் தொகுதி வளர்ச்சிப்பணிகளை சிறப்பாக செய்யும்படி முதல்வர் ஜெயலலிதா  தங்களை உற்சாகப்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதிமுகவுடனான கூட்டணியை தேமுதிக முறித்துக்கொண்ட நிலையில்,அக்கட்சியை  சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் திடீரென முதல்வரை சந்தித்து பேசியுள்ளது  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.