Published:Updated:

26 நிறுவனங்களின் இயக்குனர் பதவிகளில் கட்கரியின் பினாமிகள்!

26 நிறுவனங்களின் இயக்குனர் பதவிகளில் கட்கரியின் பினாமிகள்!
26 நிறுவனங்களின் இயக்குனர் பதவிகளில் கட்கரியின் பினாமிகள்!
26 நிறுவனங்களின் இயக்குனர் பதவிகளில் கட்கரியின் பினாமிகள்!

புதுடெல்லி: நில முறைகேடு புகாருக்கு உள்ளான பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரியின்  முன்னாள் டிரைவர் உள்ளிட்ட அவரது உதவியாளர்கள் 26 நிறுவனங்களின்  இயக்குனர்களாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் கட்கரியின் பினாமிகள் என தகவல் வெளியாகி உள்ளது.கட்கரியின் முன்னாள்  டிரைவரான மனோகர் பரைஸ், 2009 முதல் 2011 ம் ஆண்டு வரையிலான  காலக்கட்டத்தில் 11 கம்பெனிகளின் இயக்குனராக இருந்துள்ளார்.

கட்கரியின் மிக நெருங்கிய உதவியாளரான கவாடு ஜாடே என்பவர்  இதே  காலக்கட்டத்தில் 16 கம்பெனிகளுக்கு இயக்குனர்களாக இருந்துள்ளார்.

பூர்தி சுகர் அண்ட் பவர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் ஊழியர் நிஷாந்த்  அக்னிகோத்ரி என்பவர், தற்போது 13 கம்பெனிகளின் இயக்குனராக உள்ளார்.

##~~##
மற்றொரு நெருங்கிய உதவியாளரான சாகர் கோட்வால்வாடே என்பவர் 9 கம்பெனிகளின்  இயக்குனராக உள்ளார்.பூர்தி பவர் அண்ட் சுகர் பிரைவேட் லிமிடெட் (பிபிஎஸ்எல்)  நிறுவனத்தைப்போன்று நாக்பூரில் உள்ள சர்ச்சைக்குள்ளான மேலும் 3  கம்பெனிகளை,கட்கரியின் 4 நெருங்கிய உதவியாளர்களே கவனித்து வருவதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே நிதின் கட்கரிக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர்  நேற்று சோதனை நடத்தினர்.
ஏற்கெனவே நிறுவன விவகாரங்கள் அமைச்சக அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்துள்ள  நிலையில் இப்போது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளது.
நிதின் கட்கரிக்குச் சொந்தமான பிபிஎஸ்எல் நிறுவனத்துக்கு எந்தெந்த  நிறுவனங்களிலிருந்து நிதி வந்துள்ளது என்ற விவரத்தை வருமான வரித்துறையினர்  திரட்டி வருகின்றனர்.
தாங்கள் திரட்டிய ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 18 நிறுவனங்கள்  இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை மூத்த  அதிகாரி தெரிவித்துள்ளார்.
செயல்படாத நிறுவனங்கள் பல பிபிஎஸ்எல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது  கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.