Published:Updated:

ஜெகத்ரட்சகனுக்கு ரயில்வே இலாகா?

விகடன் விமர்சனக்குழு
ஜெகத்ரட்சகனுக்கு ரயில்வே  இலாகா?
ஜெகத்ரட்சகனுக்கு ரயில்வே இலாகா?
ஜெகத்ரட்சகனுக்கு ரயில்வே  இலாகா?

சென்னை:வருகிற 28 ம் தேதியன்று மேற்கொள்ளப்பட உள்ள மத்திய அமைச்சரவை  மாற்றத்தின்போது ஜெகத்ரட்சகனுக்கு,தனிப் பொறுப்பு அந்தஸ்துடன் ரயில்வே இலாகா  ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அமைச்சரவையில் திமுகவை சேர்ந்த யாரையும் புதிதாக சேர்க்க திமுக தலைவர்  கருணாநிதி விரும்பவில்லை என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில்,  மத்திய அமைச்சர் நாராயணசாமி கருணாநிதியை நேற்று சந்தித்து சுமார் 45 நிமிடம்  பேசினார்.

அப்போது திமுக எம்.பி.க்களில் யாரையும் மத்திய அமைச்சர் ஆக்க விருப்பம் இல்லை  என்று கருணாநிதி மீண்டும் திட்டவட்டமாக கூறி விட்டதாக தெரிகிறது. இதையடுத்து  கருணாநிதியிடம், தற்போதைய திமுக அமைச்சர்களின் இலாகாவை மாற்ற விரும்பினால்  மாற்றிக் கொள்ளலாம் என்றும், மு.க.அழகிரிக்கு இன்னும் வலுவான இலாகாவை தர  பிரதமர் தயாராக இருப்பதாகவும், நாராயணசாமி  கருணாநிதியிடம் தெரிவித்ததாகவும்,  ஆனால் கருணாநிதி அதையும் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

##~~##
இதையடுத்து திமுகவை சேர்ந்த இணை அமைச்சர் அந்தஸ்தில் இருக்கும் யாருக்காவது  இலாகாவை மாற்றலாமா என்று கருணாநிதியிடம் நாராயணசாமி கேட்டதாகவும்,அதனை  கருணாநிதி ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மத்திய  அமைச்சரவையில் தற்போது திமுக சார்பில் ஜெகத்ரட்சகன், பழனி மாணிக்கம்,  காந்தி செல்வன், நெப்போலியன் ஆகிய 4 பேர் இணை அமைச்சர்களாக உள்ளனர்.  இவர்களில் செய்தித்துறை இணை அமைச்சராகக இருக்கும் ஜெகத்ரட்சகன், தனக்கு வேறு  இலாகா ஒதுக்கி தரும்படி நீண்ட நாட்களாக கேட்டு வருகிறார்.
எனவே அவரது இலாகாவை மட்டும் மாற்றி கொடுக்கும்படி நாராயணசாமியிடம்  கருணாநிதி தெரிவித்திருப்பதாகவும்,குறிப்பாக காலியாக உள்ள ரயில்வே இலாகாவை  ஜெகத்ரட்சகனுக்கு கொடுக்குமாறு அவர் வலியுறுத்தியதாகவும்,இதன் காரணமாக மத்திய  அமைச்சரவை மாற்றத்தின்போது ஜெகத்ரட்சகனுக்கு ரயில்வே இலாகா தனிப் பொறுப்பு  அந்தஸ்துடன் ஒதுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்ற்ன.