Published:Updated:

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ராஜினாமா!

விகடன் விமர்சனக்குழு
வெளியுறவுத் துறை  அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ராஜினாமா!
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ராஜினாமா!
வெளியுறவுத் துறை  அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ராஜினாமா!

புதுடெல்லி:கட்சி பணிக்கு அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வெளியுறவுத் துறை  அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய அமைச்சரவை வருகிற 28 ம் தேதியன்று காலை மாற்றியமைக்கப்பட உள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.எம்.   கிருஷ்ணா உள்ளிட்ட சிலர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டு,அவர்கள் கட்சிப்   பணிக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற  உள்ளதால்,அங்கு தேர்தலை சந்திக்க கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த  தலைவர் என்ற முறையில் கிருஷ்ணாவை கட்சி பணிக்கு பயன்படுத்திக்கொள்ள சோனியா  விரும்புவதாக கூறப்படுகிறது.

மேலும் கர்நாடகா பா.ஜனதாவில் பிளவு ஏற்பட்டுள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி,  காங்கிரசை பலப்படுத்தும் நோக்கத்தில் கிருஷ்ணாவை மாநில அரசியலுக்கு திருப்பி  அனுப்ப சோனியா தீர்மானித்துள்ளதாகவும் தெரிகிறது

இதனிடையே பெங்களூர் - மைசூர் விரைவுச் சாலை முறைகேடு வழக்கு தொடர்பாக  முன்னாள் பிரதமர் தேவ கவுடா, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட 30 பேரிடம்  விசாரணை நடத்த லோக் ஆயுக்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

##~~##
இந்நிலையில் எஸ்.எம். கிருஷ்ணா இன்று தமது பதவியை ராஜினாமா  செய்துள்ளார்.கிருஷ்ணாவின் ராஜினாமாவுக்கு மேற்கூறிய முறைகேடு புகாரும் ஒரு  காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
இதனிடையே அமைச்சரவை மாற்றத்தின்போது எஸ்.எம்.கிருஷ்ணா மட்டுமல்லாது,  ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், முகுல்வாஸ்னிக், வேணி பிரசாத் வர்மா, அகதா சங்மா  ஆகியோரும் நீக்கப்பட்டு கட்சிப் பணிக்கு அனுப்பப்படுவார்கள் என்று காங்கிரஸ் கட்சி  வட்டாரங்கள் தெரிவிகின்றன.